- Home
- Tamil Nadu News
- தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அரசு
தொழிற்பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட அரசு
தமிழக அரசு, தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, மிதிவண்டி, சீருடை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படும்.

தமிழக அரசின் மாணவர்களுக்கான திட்டங்கள்
தமிழ்நாட்டில் கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், தரமானதாகவும் மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே கல்வியின் அவசியத்தை வலியுறுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஊக்குவிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்கவும் கல்வி உதவித்தொகை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவும் திட்டங்கள், பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்சாலைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, ஆர்.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-26 ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8-ம் வகுப்பு / 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆர்.கே.நகரில் சேர விரும்புவோர் மின்சாரப் பணியாளர் (Electrician), பொருத்துநர் (Fitter), கம்மியர் மோட்டார் வாகனம் (Mechanic Motor Vehicle), பற்றவைப்பவர் (Welder) மற்றும் கம்பியாள் (Wireman) தொழிற்பிரிவுகளில் 19.06.2025 முதல் நேரடிச் சேர்க்கையின் மூலம் ஆர்.கே.நகர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம்.
மாணவர்களுக்கு மாதம் 750 உதவித்தொகை
பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.750/-உதவித்தொகையாக வழங்கப்படும். அத்துடன் விலையில்லா மிதிவண்டி, அடையாள அட்டை, சீருடை, காலணிகள், புத்தகங்கள்,வரைபட உபகரணங்கள் வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கு மாதம் ரூ 1000/- கூடுதலாக வழங்கப்படும். பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேலும், சேர்க்கை சம்பந்தமாக சந்தேகம் இருப்பின் முதல்வர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆர் கே நகர். எண் 55 கத்திவாக்கம் நெடுஞ்சாலை, வட -600 021 என்ற முகவரியில் நேரில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புக்கு தொலைபேசி எண்-044-25911187 கைபேசி எண்-9962452989 & 9952673464 ஆகிய தொடர்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.