- Home
- Tamil Nadu News
- Ration shop : வீட்டிற்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! இன்று முதல்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Ration shop : வீட்டிற்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! இன்று முதல்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
தமிழகத்தில் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 10 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, திட்டத்தின் சாதக பாதகங்கள் ஆராயப்பட்டு, பிற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.

ரேஷன் பொருட்கள் விநியோகம்
நாடு முழுவதும் பல கோடி மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்களை நம்பியே உள்ளனர். பல கோடி மக்களின் உண்ண உணவு அளித்து வரும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்களின் வருமானத்திற்கு ஏற்ப பல வகையில் ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
அதன் படி வெள்ளை அட்டையானது வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.பச்சை அட்டையானது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு, மிக உயர்ந்த மானியங்களுடன் உணவுப்பொருட்கள் வங்கப்படுகிறது. பிங்க் அட்டை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கோதுமை அட்டை, பொருட்கள் இல்லாத அட்டை என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
ரேஷன் பொருட்களால் பயன் பெறும் மக்கள்
ரேஷன் அட்டைகள் உணவு பொருட்களை பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்தாலும், அரசின் திட்டங்கள் கிடைக்க ரேஷன் அட்டை முக்கிய தேவையாக உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை கட்டாயமாகும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ளம் பாதிப்பு நிவாரணம் பெறுவதற்கும் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 2.25 கோடி ரேசன் அட்டைகள் உள்ளது, இதன் மூலம் 7 கோடிக்கு மேலான மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்கி வருகிறார்கள். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களாக உள்ளது, மற்ற நாட்களில் ரேஷன் கடைக்கு சென்று உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் முதியோர்கள்
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் நேரில் சென்று பயோமெட்ரிக்கில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் ரேஷன் கடைக்கு சென்று கியூவில் நின்று பொருட்கள் வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள், நோய் பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களை வாங்க அவர்களால் அங்கீகாரம் அளித்தவர்கள் பொருட்களை வாங்கி கொடுக்கும் நிலை உள்ளது.
இதனால் வயது மூத்தவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க ஆலோசித்தது. அதன் படி, கூட்டுற மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் சோதனை முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
வீடுகளுக்கு தேடி வரும் உணவு பொருட்கள்
அதன் படி, தற்போது ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கும் திட்டம் முதல் ஐந்து நாட்களுக்கு சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது, இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர்,திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, ஆகிய 10 மாவட்டங்களில் 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே நேரில் தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
10 மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்
இந்த திட்டத்தின் வாயிலாக ஏற்படும் சாதக பாதகம், வாகனங்களில் உணவுப்பொருட்களை கொண்டு செல்வது, பயோ மெட்ரிக் கருவி உள்ளிட்டவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக எவ்வளவு பேருக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு சாத்தியம் உள்ளது. இந்த ஐந்து நாட்களில் ஆய்வு செய்யப்பட்ட பிறகு திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு அடுத்த கட்டமாக மற்ற மாவட்டங்களில் விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.