எப்படி இருந்த மனுஷன்..! சோசியல் மீடியாவில் தூள் பறக்கும் மீம்ஸ்.. கதறும் புஸ்ஸி
Bussy Anand absconding case : தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவான நிலையில் அவரை கிண்டல் செய்து நெட்டிசன்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் மாநாட்டையே நாடு முழுவதும் திரும்பி பார்க்க வைத்தார்,
இதனை தொடர்ந்து மதுரையில் இரண்டாவது மாநாட்டையும் நடத்தி அசத்தினார். இந்த மாநாட்டில் பல லட்சம் இளைஞர்கள் குவித்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விஜய் செல்லும் இடமெங்கும் இளைஞர்கள் கூட்டம் கூடி போக்குவரத்திற்கும் மக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த விஜய்யின் தவெகவில் அரசியல் அனுபவமுள்ள தலைவர்கள் யாரும் இல்லை, விஜய்யின் ரசிகர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த புஸ்ஸி ஆனந்த் தான் தவெகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரும் புதுச்சேரியில் எம்எல்சியாக இருந்தவர்.
மற்ற அடுத்தக்கட்ட தலைவர்களாக ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல் குமார் உள்ளனர். எனவே விஜய்யை சந்திக்க வேண்டும் என்றால் புஸ்ஸியை சந்தித்தால் மட்டுமே முடியும். அந்த அளவிற்கு நெருக்கமாக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் நேரடியாகவே புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.
ஆனால் அப்போது கூட தந்தையை தூக்கி போட்ட விஜய் புஸ்ஸி ஆனந்தை பக்கத்திலேயே வைத்திருந்தார். இந்த நிலையில தான் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக நிர்வாகி சிடி நிர்மல்குமார் மீது வழக்கு பதியப்பட்டது. அடுத்த நாளை மதியழகன் கைது செய்யப்பட்ட நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் தலைமறைவாகிவிட்டனர்.
கடந்த ஒரு வாரமாக இந்த இரண்டு பேரை பிடிக்க 5க்கும் மேற்பட்ட தனிப்படை தேடி வருகிறது. நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 பேருக்கு தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் தேடுதல் பணி தீவிரம் அடைந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல் குமார் வீடுகள், அவரது உதவியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புஸ்ஸி ஆனந்த் பல வேடங்களில் தலைமறைவாக இருப்பதாக கூறி கிண்டல் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். கலகலப்பு படத்தில் போலீசுக்கு பயந்து நடிகர் இளவரசு பல வேடங்களில் சுற்றுவார். அவரைப்போல புஸ்ஸி ஆனந்த் படங்களை மாற்றி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள்.