- Home
- Tamil Nadu News
- மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் டிடிவி, ஓபிஎஸ்..? பழனிசாமியை வீட்டிற்கே சென்று சந்திக்கும் நயினார்
மீண்டும் அதிமுக கூட்டணிக்குள் டிடிவி, ஓபிஎஸ்..? பழனிசாமியை வீட்டிற்கே சென்று சந்திக்கும் நயினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

எடப்பாடி வீட்டில் நயினார் நாகேந்திரன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக பழனிசாமி விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை
நயினார் நாகேந்திரனுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைப்பொதுச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் ஆலோசனையில் உடன் இருக்கின்றனர்.
மீண்டும் கூட்டணிக்குள் வரும் டிடிவி தினகரன், பன்னீர்செல்வம்..?
எடப்பாடி பழனிசாமி உடனான இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.