- Home
- Tamil Nadu News
- உண்மையா சொல்றேன்! இந்த விஷயத்துல திமுகவை அடிச்சுக்க ஆளாயில்லை! தனித்து வெற்றி பெறும்! நயினார்!
உண்மையா சொல்றேன்! இந்த விஷயத்துல திமுகவை அடிச்சுக்க ஆளாயில்லை! தனித்து வெற்றி பெறும்! நயினார்!
Nainar Nagendran: திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் நான்கரை ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

DMK Election promise
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளில் அள்ளி வீசியது. அதில், அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம் குறைக்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகியும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
nainar nagendran
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.
DMK
அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.
MK Stalin
கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.