- Home
- Tamil Nadu News
- ஷாக்கிங் நியூஸ்! போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!
ஷாக்கிங் நியூஸ்! போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!
Pothys: போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் சென்னை ஈசிஆர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

Pothys
போத்தீஸ் என்பது தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சங்கிலித் தொடர் துணிக்கடை ஆகும். துணிகள் மட்டுமல்லாது வீட்டு உபயோக பொருட்கள், பலசரக்கு பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். முதலில் அவர்கள் பட்டுப் புடவைகளை பிரத்தியேகமாக விற்றனர், ஆனால் இன்று துணிகள் மட்டுமன்றி அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் விற்கப்படுகின்றன.
Pothys Shop
போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தனது சேவையை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், புதுச்சேரி, கோவை, திருவில்லிபுத்தூர், சேலம் ஆகிய முக்கிய நகரங்களில் அமைத்துள்ளது. அதுமட்டும் அல்லாது பிற மாநிலங்களான கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் அமைந்துள்ளது.
IT Raid
இந்நிலையில் சென்னை ஜிஎன்செட்டி சாலையிலுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திலும், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள போத்தீஸ் உரிமையாளர் ரமேஷ் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட கார்களில் போத்தீஸ்க்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
Pothys Jewelry
மேலும் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை மற்றும் துணிக்கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் பகுதி மற்றும் மதுரை மேலமாசி வீதிகளில் உள்ள போத்தீஸ் துணிக்கடைகளில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.