- Home
- Tamil Nadu News
- வானிலை மையம் சொன்ன எச்சரிக்கை! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? சென்னை நிலவரம் என்ன?
வானிலை மையம் சொன்ன எச்சரிக்கை! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? சென்னை நிலவரம் என்ன?
தமிழகத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. வெப்பநிலையும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு.

Tamilnadu Rain
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Heatwave
வெப்ப நிலை உயரும்
இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாட்டி வதைத்த கோடை வெயில்; சென்னையை குளிர்வித்த திடீர் மழை, குஷியில் பொதுமக்கள்!
chennai weather
சென்னை வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
Tamilnadu Rain
அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு
இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain News
தமிழகத்தில் நேற்று பரவலாக மழை
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்து வெப்பதை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மற்றும் புறநனர் பகுதிகளான வடபழனி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தரமணி, பள்ளிக்கரணை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.