MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வாட்டி வதைத்த கோடை வெயில்; சென்னையை குளிர்வித்த திடீர் மழை, குஷியில் பொதுமக்கள்!

வாட்டி வதைத்த கோடை வெயில்; சென்னையை குளிர்வித்த திடீர் மழை, குஷியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 16 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
heatwave in tamilnadu

heatwave in tamilnadu

கோடை வெயில்

தமிழகத்தில் தலைநகர் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Atmospheric circulation

Atmospheric circulation

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 

இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

35
Tamilnadu rain

Tamilnadu rain

இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை 

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

45
Chennai Weather

Chennai Weather

அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை

இதனிடையே அடுத்த  3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம்  உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

55
Chennai Rain

Chennai Rain

சென்னையில் மழை 

அதன்படி தலைநகர் சென்னையில் கிண்டி, அசோக் நகர், நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினபாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. ஆவடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னையில் சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வானிலை
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved