- Home
- Tamil Nadu News
- தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது..! காங்கிரஸ் எம்பி சொன்ன பகீர் தகவல்
தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது..! காங்கிரஸ் எம்பி சொன்ன பகீர் தகவல்
Manickam Tagore on Vijay : நடிகர் விஜய்யின் தவெக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுப்பதாக காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் தவறான முடிவுகளும், பாஜகவின் அழுத்தங்களும் விஜய்யின் கட்சியை வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆலோசனை தொடங்கியுள்ளது.
அதிமுக தங்கள் அணியை பலப்படுத்தவும், திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்கவும் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதே நேரம் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் எதிர்கட்சியான அதிமுகவிற்கும் ஷாக் கொடுத்து வருகிறார். விஜய் செல்லும் இடமெங்கும் கூட்டம் கூடி வருகிறது.
எனவே தேர்தலில் விஜய்க்கு செல்லக்கூடிய வாக்குகள் அதிமுகவின் வாக்குகளா.? அல்லது திமுகவின் வாக்குகளா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் தவெக எதிர்கட்சியாக உருவாகி வருவதாக காங்கிரஸ் எம்பி அதிமுகவிற்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அதிமுக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவறான முடிவால் தவெக எதிர் கட்சியாக உருவாகி வருகிறது என கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து தவெகவை பெரிய கட்சியாக மாற்றி வருகிறார்கள்.
அமித்ஷா அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை பயன்படுத்தி கட்சிகளை வளைக்க பயன்படுத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளுக்கே நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக தான் பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகுவதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களிலேயே அவரது உறவினரான சசிகலாவின் சொத்துக்களுக்கு அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது.
மற்ற கட்சிகளை மிரட்டுவதற்காகத் தான் அமலாக்க துறையும், வருமான வரித்துறையும் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த பிளாக் மெயில் பாலிடிக்ஸ் எடுபடாது என தெரிவித்தார்.
எனவே எடப்பாடி பழனிச்சாமியின் அமித்ஷாவும் அண்ணாமலையும் சேர்ந்து விஜயை பெரிய கட்சியாக மாற்றிக் கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இந்திய கூட்டணி பலமாக உள்ளது. அதில் எதிர்பக்கம் உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் கூட்டணி தலைவராக இருக்க வேண்டும்.
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, அமித்ஷா அதிமுகவாக மாறிவிட்டது. பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எதிர் கட்சியாக கூட இருக்க முடியாத கட்சியாக மாறிக்கொண்டு வருகிறது.
எனவே எதிர்கட்சி என்ற அந்த இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என கேள்வி எழுப்பியவர், அன்புமணி ராமதாஸ் நிரப்ப போகிறார்.? அந்த இடத்தை நிரப்ப போகிறவர் விஜய் என்ற நபர் தான். தமிழகத்திற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற போகிறது. எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் போகப்போகிறார் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.