- Home
- Tamil Nadu News
- ஹேப்பி நியூஸ்! மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
ஹேப்பி நியூஸ்! மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக தாம்பரம் - மதுரை இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழா
Madurai chithirai thiruvizha Special Train: உலக பிரசிதி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 8ம் தேதி மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மதுரைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் அறிவிப்பு
இந்நிலையில் மதுரை சித்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இன்று இரவு 11.30 மணிக்கு ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரையை சென்றடையும். அதேபோல் மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு மே 12-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
எந்ததெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மதுரையை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.