எடப்பாடிக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் சரி..! ஒரே போடாக ஷட்டரை சாத்திய பாஜக
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்காது என பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்த ஈபிஎஸ்
அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த பணிகளை நான் மேற்கொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பகீர் கிளப்பினார். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக செங்கோட்டையனின் அனைத்து வகையான கட்சிப் பதவிகளையும் பறிப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்?
இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் நான் தற்போது மனம் சரியில்லாத காரணத்தால் ஹரித்துவார் செல்ல உள்ளேன். அங்கு ராமரை வழிபடலாம் என்ற திட்டத்தோடு பயணிக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால், கோவிலுக்கு செல்வதாக சொன்ன செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மறைமுகமாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
டெல்லியில் முகாமிட்ட செங்கோட்டையன்?
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம் அளித்தார். அதிமுக.வின் மற்றொரு மூத்த நிர்வாகிகளில் ஒருவரான தங்கமணியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக யாரும் முகாம் இடவில்லை. பாஜக தற்போது குடியரசு துணைத்தலைவர் தேர்தல், உலகலாவிய பொருளாதாரம் தொடர்பாக தீவிரமாக வேலை செய்து வருகிறோம். இதற்கு இடையே இந்த பஞ்சாயத்தை் தீர்க்க எங்களுக்கு நேரம் இல்லை.
எடப்பாடிக்கு எதிரானவர்களை பாஜக ஆதரிக்காது..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்களை பாஜக தலைவர்கள் தேர்தல் முடிவடையும் வரை சந்திக்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.