- Home
- Tamil Nadu News
- போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது ஏன்.? Sorry கேட்டது ஏன்.? சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு தகவல்
போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது ஏன்.? Sorry கேட்டது ஏன்.? சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு தகவல்
நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமானுக்கு சம்மன் ஒட்டப்பட்ட விவகாரத்தில், சம்மனை கிழித்தது ஏன் என கயல்விழி விளக்கம் அளித்துள்ளார். காவலாளி கைது செய்யப்பட்டது குறித்து போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது ஏன்.? Sorry கேட்டது ஏன்.? சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு தகவல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய நிலையில், சீமானிடம் விசாரணை நடத்த சம்மன் அளித்திருந்தனர்.
ஆனால் நேற்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் மீண்டும் வீட்டு வாசலில் சம்மன் ஒட்டப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த சம்மன் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க சென்ற நிலையில், சீமான் வீட்டு காவலாளி காவல் ஆய்வாளரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
சம்மனை கிழித்த சீமான் உதவியாளர்
இதன் காரணமாக காவல் ஆய்வாளருக்கும், சீமான் வீட்டில் இருந்த காவலாளி அமல்ராஜ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சீமானின் மனைவி காவல் ஆய்வாளரிடம் ஸாரி கேட்டிருந்தார். இருந்த போதும் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த சீமானின் மனைவி கயல்விழி விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே போலீசார் சம்மன் கொண்டு வந்தார்கள். அப்போது என்னிடம் தான் கேட்டார்கள். அதற்கு பின்பாக காத்திருந்து சீமானை சந்தித்து சம்மனை கொடுத்துவிட்டு சென்றார்கள்.
கயல்விழி விளக்கம்
இந்த நிலையில் நேற்று வீட்டில் நான் இருந்தேன். உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சம்மன் கொடுத்திருக்கலாம், அல்லது என்னை சந்தித்து சம்மன் வழங்கி இருக்கலாம். ஆனால் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டி சென்றனர். இது தொடர்பாக என்னிடம் வீட்டில் உதவியாளராக இருந்த சுபாகரிடம் கூறியதையடுத்து அதனை பார்ப்பதற்காக கிழித்து தரும்படி கேட்டுக்கொண்டேன்.
நான் வெளியில் வந்திருப்பேன், இரவு உடை அணிந்திருந்ததால் அனைத்து மீடியாவும் இருந்ததால் வெளிய வர தயங்கினேன். இதனையடுத்த தான் சுபாகரிடம் கிழிக்க சொன்னேன். அதனை படித்துக்கொண்டிருந்த போது தான் காவல் ஆய்வாளர் வந்தார்.
கைது செய்வார்கள் என நினைக்கவில்லை
என்னையவே தள்ளுகிறாயா.? என்ற சத்தம் கேட்டது. அப்புறம் அவரை இழுத்து செல்லும் போது தான் எப்படி சும்மா இருப்பது என நான் வந்தேன். அப்போது தான் என்ன செய்திருக்கிறார் என பாருங்கள் என கூறினார் ஆய்வாளர். அப்போது தான் காவலாளி ஏதேனும் தவறாக பேசிவிட்டோரோ என நினைத்து தான் ஸாரி கேட்டேன். கைது அளவிற்கு கொண்டு செல்வார்கள், ரிமாண்ட் செய்வார்கள் என துளி அளவு கூட யோசிக்கவில்லை.
போலீசார் திட்டம் போட்டே செய்துள்ளனர். வளசரவாக்கம் போலீசார் ஒட்டிய பிறகு நீலாங்கரை போலீசார் ஏன் வந்தார்கள். எங்கள் வீட்டில் உள்ள அமல்ராஜ் அண்ணன் ஏதோ செய்துவிட்டார் என்று தான் போலீசாரிடம் ஸாரி கேட்டேன். வீடியோ பதிவில் எல்லாம் தெளிவாக உள்ளது.
ஸாரி கேட்டது ஏன்.?
காவல் ஆய்வாளர் பிளான் செய்து தான் செய்துள்ளனர். வழக்கை பார்த்து பயம் இல்லை. சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன். கிழித்தவரை கைது செய்துள்ளனர். மக்களுக்காக உழைக்கும் தலைவர் சீமான், எங்களது மனநிலையை குலைக்க வேண்டும் என திட்டமிட்டு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மனித உரிமை மன்றத்திலும் வழக்கு தொடருவோம். மரியாதையாக பேசி உள்ளே வந்து இருக்கலாம். என்னையே கைது செய்து சென்றிருக்கலாம் என ஆவேசமாக கயல்விழி தெரிவித்தார்.