- Home
- Tamil Nadu News
- மத்தவங்க மாதிரி நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு போகட்டுமா? நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்ட செந்தில் பாலாஜி
மத்தவங்க மாதிரி நானும் டிக்கெட் போட்டு சென்னைக்கு போகட்டுமா? நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்ட செந்தில் பாலாஜி
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து எழுந்த சதி குற்றச்சாட்டுகளுக்கும், மருத்துவமனைக்கு உடனடியாக சென்றது குறித்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் விபத்தா.? அல்லது வேறு ஏதேனும் சதியா என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவ நடைபெற்ற போது உடனடியாக செந்தில் பாலாஜி அந்த பகுதிக்கு சென்றது எப்படி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், கரூரில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்ட உடனே மருத்துவமனைக்கு போனது எப்படி என கேள்வி கேட்கிறார்கள்.
திமுகவின் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன். பகுதி செயலாளர் மற்றும் நகர செயலாளர் உடன் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். கட்சி அலுவலகத்தில் இருக்கும் பொழுது தான் நெரிசலில் சிக்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறினார்கள்.
கட்சி அலுவலகத்திலிருந்து அமராவதி மருத்துவமனைக்கு செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என நீங்களே கூறுங்கள். மருத்துவமனைக்கு உள்ளே மாலை 7 மணி 47 நிமிடங்களுக்கு நுழைந்தேன்.
அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் 8.10 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு செல்கிறார். நான் மருத்துவமனைக்கு சென்ற போது அனைத்து கட்சி நிர்வாகிகளும் இருந்தார்கள். ஆம்புலன்ஸ் வரும் பொழுது பாதிக்கப்பட்டவர்களை இறக்கி வரும் பணியில் உதவி செய்து கொண்டிருந்தார்கள். எனவே மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மக்களுக்கு உதவாமல் டிக்கெட் போட்டு விட்டு சென்னை போக வேண்டுமா.? எஎன கேள்வி எழுப்பினார்.
மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான் சம்பவ இடத்திற்கு செல்லாமல் நான் டிக்கெட் போட்டு விட்டு சென்னைக்கு போக வேண்டுமா.?
யாருக்கும் பதில் சொல்லாமல் உதவி செய்யாமல் சென்னைக்கு சென்று விடவா.? அப்படிப்பட்ட சூழலை தான் சிலர் எதிர்பார்க்கிறார்கள் என்ன நான் நினைக்கிறேன். நான் இருக்கிற வரை எங்கள் மாவட்ட மக்களுக்கு எந்த பாதிப்பு இருந்தாலும் முதல் ஆளாக நான் இருப்பேன் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.