- Home
- Tamil Nadu News
- தீபாவளி பரிசு: விவசாயிகளின் வங்கி கணக்கில் விழப்போகுது 2000 ரூபாய்.? குஷியான தகவல்
தீபாவளி பரிசு: விவசாயிகளின் வங்கி கணக்கில் விழப்போகுது 2000 ரூபாய்.? குஷியான தகவல்
Rs 2000 to farmers : தீபாவளிக்கு முன்பாகவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை pmkisan.gov.in இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நம்மை போன்ற மக்கள் சோற்றில் கை வைக்க முடியும், எனவே விவசாயிகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதிலும் விவசாயிகளுக்காக பல்வேறு மானிய திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க தொடங்கப்பட்ட திட்டமே பிஎம் கிசான் யோஜனா. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகளின் வங்கி கணக்கில் 6000 ரூபாய்
இந்தத் திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் 75 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடைசியாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தவணை வெளியிடப்பட்டது.
நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரூ.2000 செலுத்தப்பட வேண்டும். ஆனால், இம்முறை தீபாவளிக்கு முன்பாகவே ரூ.2000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தீபாவளிக்கு விவசாயிகளின் கணக்கில் மத்திய அரசு 2000 ரூபாய் செலுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஎம் கிசான் யோஜனா- விவசாயிகளுக்கு ரூ. 2000
பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் கிடைக்கிறது. ஆந்திர அரசு அன்னதாதா சுகிபவ திட்டத்தின் கீழ் 14,000 ரூபாய் வழங்குகிறது. அதாவது, மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆண்டுக்கு 20,000 ரூபாய் விவசாயிகளின் கணக்கில் செலுத்துகின்றன. இதே போல தமிழக அரசும் விவசாயிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெயரை சரிபார்க்கும் விவசாயிகள்
பிஎம் கிசான் இணையதளமான pmkisan.gov.in-க்குச் சென்று, பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது. முகப்புப் பக்கத்தில் 'பயனாளி பட்டியல்' என்ற விருப்பம் இருக்கும். அதில் உங்கள் மாநிலம், மாவட்டம், கிராமம் போன்ற விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் வரும் அறிக்கையைக் கிளிக் செய்யவும். உங்கள் கிராமத்தின் பயனாளிகள் பட்டியல் தோன்றும். அந்தப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனச் சரிபார்க்கவும். இதன் மூலம் தீபாவளிக்கு முன்னதாக வரும் 2000 ரூபாயை தங்களது வங்கி கணக்கிற்கு வருமா.? என தெரியவரும்