ஓடிடியில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 மூவீஸ் மற்றும் வெப் சீரிஸ் இதோ
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

Most Watched Movies on OTT
தியேட்டர்களில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடி தளங்களிலும் புதுப் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின்றன. அந்த வகையில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் சன் ஆஃப் சர்தார் 2 என்கிற பாலிவுட் படம் முதலிடத்தில் உள்ளது. அஜய் தேவ்கன் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இது 30 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.
டாப் 5 திரைப்படங்கள்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மகாவதார் நரசிம்மா என்கிற அனிமேஷன் திரைப்படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படம் 28 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. இதையடுத்து மூன்றாவது இடத்தில் மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 24 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தை சையாரா என்கிற இந்தி படம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படம் 23 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. தடக் 2 என்கிற இந்தி படம் 19 லட்சம் பார்வைகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.
Most Watched Web Series on OTT
ஒவ்வொரு வாரமும் OTT-யில் பல வெப் தொடர்கள் வெளியாகின்றன, ஆனால் சில மட்டுமே ரசிகர்களின் மனதை வென்று டாப் 5-ல் இடம்பிடிக்கின்றன. இந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்கள் பட்டியலில் எந்தத் தொடர் எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பார்ப்போம். அதன்படி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பேட்ஸ் ஆஃப் பாலிவுட்’ என்கிற வெப் தொடர், நெட்பிளிக்ஸில் வெளியானதில் இருந்து தொடர்ந்து மூன்று வாரங்களாக முதலிடத்தில் உள்ளது. இது வெப் தொடர் கடந்த வாரத்தில் மட்டும் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
டாப் 5 வெப் தொடர்கள்
தமிழ் வெப் தொடரான ‘தி கேம்’ இரண்டாம் இடத்தில் உள்ளது. கிரைம் த்ரில்லர் வெப் தொடரான, இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்தத் தொடர் 2.4 மில்லியன் பார்வைகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
‘தி டிரெயல் சீச 2’வில் கஜோல், ஜிஷு சென்குப்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்தத் தொடர் 2.1 மில்லியன் பார்வைகளைப் பெற்று, பார்வையாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் ‘சிக்ஸர் சீசன் 2’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வாரம் 2.0 மில்லியன் பார்வைகளைப் பெற்று, பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
‘13த்’ என்கிற வெப் தொடர், இந்த வாரம் 1.2 மில்லியன் பார்வைகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதை சோனி லிவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.