- Home
- Cinema
- இட்லி கடைக்கு ஆப்பு வைக்க வரும் அரை டஜன் படங்கள் - இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட் இதோ
இட்லி கடைக்கு ஆப்பு வைக்க வரும் அரை டஜன் படங்கள் - இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட் இதோ
இட்லி கடை மற்றும் காந்தாரா சாப்டர் 1 படங்கள் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், வருகிற அக்டோபர் 10ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்
அக்டோபர் முதல் வாரத்தில் ஆயுத பூஜை விடுமுறை வந்ததால், அதையொட்டி தனுஷ் நடித்த இட்லி கடை மற்றும் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த இரண்டு படங்களுமே அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருவதால், அக்டோபர் 10ந் தேதி அதற்கு போட்டியாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இருந்தாலும் ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. அதன்படி அக்னி பத்து, அனல் மழை, ஐஏஎஸ் கண்ணம்மா, இறுதி முயற்சி, கயிலன், மருதம், தந்த்ரா, வட்டக்கானல் ஆகிய எட்டு திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ரேம்போ
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் ரேம்போ. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்திருக்கிறார் அருள்நிதி. இப்படம் வருகிற அக்டோபர் 10ந் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
OTT Release Movies
வார் 2 (War 2)
ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரசிகர்கள் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்த நிலையில், அக்டோபர் 9 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
மிராய் (Mirai)
தேஜா சஜ்ஜா நடித்த சூப்பர் ஹீரோ படமான “மிராய்” பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் அக்டோபர் 10 அன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஸ்பானிஷ் படமான கேரமெலோவும் இந்த வாரம் வெளியாகிறது.
ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்கள்
வேடுவன் (Veduvan): ஜீ5-ல் வெளியாகும் இந்தத் தொடர் காதல், துரோகம் பற்றியது. கண்ணா ரவி, சஞ்சீவ், ரம்யா, ரேகா நாயர் ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் தொடர் அக்டோபர் 10 ந் தேதி ஜீ5-ல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
குருக்ஷேத்ரா (Kurukshetra): மகாபாரத அனிமேஷன் தொடர், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. மேலும் சில தொடர்களும் இந்த வாரம் வெளியாகின்றன.