MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Annamalai : மத்திய அமைச்சராக பதவியேற்கிறார் அண்ணாமலை.? புதிய பாஜக மாநில தலைவர் யார்.?

Annamalai : மத்திய அமைச்சராக பதவியேற்கிறார் அண்ணாமலை.? புதிய பாஜக மாநில தலைவர் யார்.?

தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தாலும், மோடியின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி அளிக்கவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்கும் படி அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 09 2024, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Modi

Modi

தேர்தலில் பாஜகவிற்கு அதிர்ச்சி

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் சுமார் 2 மாத காலம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும்  ஆட்சியமைப்போம் என பாஜக உறுதியாகக் கூறியது.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கூட பெற முடியாமல் 240 தொகுதிகளையே பாஜக எட்டியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

கூட்டணி கட்சி உதவியுடன் பாஜக ஆட்சி

இதனையடுத்து ஆந்திராவில் இருந்து சந்திரபாபு நாயுடு, பீகாரில் இருந்து நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவோடு இன்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே மத்திய அமைச்சரவையும் புதிதாக பதவி ஏற்க உள்ளது. கூட்டணி கட்சினருக்குமுக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர் பதவிகள் பிரித்து வழங்கப்பட உள்ளது.

பாஜகவிற்கு இன்னும் 20 சீட் குறைந்திருந்தால் அறிவாலயம் வாசலில் தமிழிசை காத்திருந்திருப்பார்.!! துரை வைகோ பதிலடி

35
annamalai

annamalai

குட் புக்கில் அண்ணாமலை

அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவினாலும் பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சராவார் என தகவல் வெளியாகி உள்ளது.  

கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை சேர்ந்த எல் முருகன், நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவியில் வழங்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று புதிதாக மத்திய அமைச்சரவை பதவி ஏற்கவேண்டிய நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.  

45
annamalai

annamalai

அண்ணாமலைக்கு அழைப்பு

புதிதாக பதவி ஏற்க உள்ள உறுப்பினர்களுக்கு இன்று பிரதமர் மோடி தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.  இந்த விருந்தில் பங்கேற்கும்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே இன்று மாலை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அண்ணாமலையும் மத்திய அமைச்சராக பதவி ஏற்பார் என தெரிகிறது .

அதே நேரத்தில் இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு அரசியல் களத்திற்கு மீண்டும் வந்த தமிழிசை தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.  எனவே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

55

புதிய மாநில தலைவர் யார்.?

அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவை மேலும் வலுப்படுத்த புதிய மாநில தலைவரை நியமிக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அந்த வகையில் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கே.பி ராமலிங்கம் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்பார்கள் என கூறப்படுகிறது.

Annamalai vs BJP: ஆணவம், திமிரால் சொந்த ஊரிலேயே அண்ணாமலை பெற்ற வாக்குகளை இது தான்.!!மீண்டும் சீறிய கல்யாணராமன்
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
அரசியல்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved