பாஜகவிற்கு இன்னும் 20 சீட் குறைந்திருந்தால் அறிவாலயம் வாசலில் தமிழிசை காத்திருந்திருப்பார்.!! துரை வைகோ பதிலடி

இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும், சிலரை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் மிரட்டல், பிளாக்மெயில் என அனைத்தையும் பாஜக தலைமையில் இருப்பவர்கள் செய்வார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.   

Durai Vaiko has said that BJP rule will not last for 5 years KAK

பாஜக-இயற்கையான கூட்டணி இல்லை

திருச்சியில் மதிமுக சார்பாக நடைபெறும் பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த துரை வைகோசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பாஜக அரசு கூட்டணியை நம்பி ஆட்சி அமைத்துள்ளது இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் இயற்கையான கூட்டணி கிடையாது.  

பல இயக்கங்கள் அந்தக் கூட்டத்தில் ஒரு நிர்பந்தத்தின் காரணமாக இருக்கின்றனர். அவர்களுக்கு மெஜாரிட்டி கிடையாது.  கூட்டணியை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை பொருத்தவரை அவர்கள் மற்ற கட்சியை உடைத்து அவர்கள் ஆட்சியை கைப்பற்றுவது தான் வாடிக்கை,  தற்பொழுது தெலுங்கு தேசம்,  நிதீஷ் குமார் கட்சியை நம்பி அவர்கள் ஆட்சியில் உள்ளனர். 

பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்.? சந்திரபாபு நாயுடு Vs நிதிஷ் குமார் Vs பவன் கல்யாண்!

இந்தியா கூட்டணியை உடைப்பார்கள்

இந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் அடுத்த கட்டமாக மற்ற கட்சிகளை உடைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றவும் பார்ப்பார்கள் இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காக அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்றார். பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சியில் வந்துள்ளதால் அமலாக்கத்துறை சோதனைகள் தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்,  அதை இன்னும் கடுமையாக அவர்கள் செய்வார்கள் இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காகவும் சிலரை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் மிரட்டல் பிளாக்மெயில் என அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.  கடந்த காலங்களில் அவர்கள் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து இருக்கிறார்கள்.  அங்கெல்லாம் அவர்கள் கூட்டணியை உடைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். 

பாஜக வாக்கு சதவிகிதம் உயர்ந்ததா.?

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். அது அவர்களது வளர்ச்சியா சென்ற முறை 9 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை விட தற்போது 23 இடங்களில் போட்டியிட்டு அவர்கள் வாங்கிய வாக்கு சதவீதம் குறைவு என்றார். பாஜக கூட்டணியில் பாமக மற்றும் அனைத்து ஜாதி கட்சிகள் மற்றும் செல்வாக்கான பாரிவேந்தர், டி.டி.வி. ,  ஏ.சி.எஸ் உள்ளிட்ட செல்வாக்கான நபர்களின் வாக்குகளும் சேர்ந்துள்ளது. சீமானை போல் பாரதிய ஜனதா கட்சியை தனியாக நிற்கச் சொல்லுங்கள், அவர்கள் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதை ஒத்துக்கொள்கிறேன் என்றார்‌.

Annamalai vs BJP: ஆணவம், திமிரால் சொந்த ஊரிலேயே அண்ணாமலை பெற்ற வாக்குகளை இது தான்.!!மீண்டும் சீறிய கல்யாணராமன்

அறிவாலயத்தில் காத்திருந்திருப்பார்கள்

40 இடங்கள் ஜெயித்தும் பிரயோஜனம் இல்லை என்று தமிழிசை கூறியது தொடர்பான் கேள்விக்கு பதிலடி கொடுத்த அவர்,  இன்னும் 20 இடங்கள் பாஜக குறைந்திருந்தால் அவர்கள் அறிவாலயம் வாசலில் காத்திருப்பார்கள் என்றார். திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே  என்ற கேள்விக்கு,  இந்த நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை பாஜகவின் ஜாதி, மத பிரச்சாரம்,  சமூக வலைதளங்களில் அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் மீறி நாங்கள் அதிகமாக வாக்குகளை பெற்றுள்ளோம்.  

தளபதி ஸ்டாலின் பிரச்சாரமே இந்த வெற்றிக்கு காரணம் , ஒன்றிய அரசின் போதிய நிதி ஒதுக்காதது , அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நாங்கள் பிரச்சாரம் செய்தோம் ,ஒட்டுமொத்தமாக 40க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம் என துரை வைகோ கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios