Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்.? சந்திரபாபு நாயுடு Vs நிதிஷ் குமார் Vs பவன் கல்யாண்!

பிரதமர் மோடி அமைச்சரவையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4, நிதிஷ்க்கு 2, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Which ministry in the Modi administration would be assigned to TDP, JDU, and Jana Sena?-rag
Author
First Published Jun 8, 2024, 6:06 PM IST | Last Updated Jun 8, 2024, 6:42 PM IST

543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பாஜகவுக்கு தனிமெஜாரிட்டிக்கான 272 சீட் கூட கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் மட்டுமே பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

Which ministry in the Modi administration would be assigned to TDP, JDU, and Jana Sena?-rag

பாஜகவின் 240 சீட்டுகளுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏவின் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு எத்தனை இடம் போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி,  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4, நிதிஷ்க்கு 2, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios