- Home
- Tamil Nadu News
- அதிமுகவிற்கு ஆதரவு வாபஸ்.! விஜய் கட்சிக்கு பல்டி - இஸ்லாமிய கட்சி அதிரடி அறிவிப்பு
அதிமுகவிற்கு ஆதரவு வாபஸ்.! விஜய் கட்சிக்கு பல்டி - இஸ்லாமிய கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களத்தில் பரபரப்பான மாற்றங்கள். அதிமுக கூட்டணியில் இருந்து இஸ்லாமிய கட்சி விலகி த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்துள்ளது.

தேர்தல் களமும் அரசியல் கட்சியும்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருக்க நெருங்க அரசியல் களம் மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்பது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும் வகையில், தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, உட்கட்சி மோதல் தொடர்பாக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதேபோல அதிமுகவும் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த புது கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தியது. முதலில் நடிகர் விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடிகர் விஜய்யின் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கையால் அங்கிருந்து விலகியது அதிமுக, அடுத்தாக திமுகவிற்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவுடன் கூட்டணியை மீண்டும் உறுதி செய்தது.
அதிமுக- பாஜக கூட்டணி
அதே நேரம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பெரிய அளவில் விரும்பவில்லை. பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகிற்கு கிடைக்காது என கட்சிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள மாவட்ட அளவிலான சிறுபான்மை தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இருந்து விலகி வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அதிமுகவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவு தெரிவித்து வந்த இஸ்லாமிய கட்சி ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
அதிமுகவிற்கு ஆதரவு வாபஸ்
இதனையடுத்து ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் பொதுசெயலாளர் ஆனந்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளதாகவும், எனவே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும், ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சியின் நிறுனவர் தமீம் தெரிவித்துள்ளார். மேலும் தவெக தலைவர் விஜய்யை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறினார்.