- Home
- Tamil Nadu News
- அதிமுக மாஜி எம்எல்ஏவை தட்டித்தூக்கிய விஜய்.! தவெகவில் ஐக்கியமாகும் முன்னாள் நீதிபதி, ஐஆர்எஸ் அதிகாரி
அதிமுக மாஜி எம்எல்ஏவை தட்டித்தூக்கிய விஜய்.! தவெகவில் ஐக்கியமாகும் முன்னாள் நீதிபதி, ஐஆர்எஸ் அதிகாரி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.

அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. எனவே தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலத்திற்கும் குறைவான நாட்களே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய்,
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய் தனது முதல் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தாக கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகிகளை வரை நியமிக்கவும் செய்தார்.
தவெகவில் இணையும் விவிஐபிக்கள்
தவெகவை தொடங்கிய விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்காமல் உள்ளார். தற்போது நடித்து வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் தவெகவை வழுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்சியினர் விஜய் முன்னிலையில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தவெக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்த IRS அதிகாரி அருண் ராஜ்,
விஜய்யோடு இணையும் அதிமுக மாஜி எம்எல்ஏ
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜலட்சுமி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரும் உள்ளிட்ட ஆறு பேர், விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளனர். மாஜி எம்எல்ஏக்கள் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டுமே பல்டி அடித்து வந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மாஜி எம்எல்ஏ இணைந்திருப்பது அரசியல் விமர்சகர்களை திரும்பி பார்க்கவைத்துள்ளது. ராஜலட்சுமி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார்.
மேலும் அதிமுக முன்னாள் எம் எல் ஏ ஸ்ரீதரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் ஆகியோரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைகின்றனர்
ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ்
மேலும் தவெகவில் இணையும் முன்னாள் IRS அதிகாரியான அருண் ராஜ் பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். திரைமறைவில் விஜய்க்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்த அருண் ராஜ் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டு முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்கவுள்ளார்.