என்னது நான் கர்ப்பமா? கெனிஷா ஷாக்- உண்மை என்ன விளக்கம் கொடுத்த பாடகி!
Kenishaa Francis explains pregnancy rumors : ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும் இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் அது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

ரவி மோகன் - கெனிஷா உறவு?
Kenishaa Francis explains pregnancy rumors : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன் தான் இப்போது அடிக்கடி தலைப்பு செய்திகளில் வருகிறார். இதுவரையில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து அடிக்கடி சர்ச்சையிலும் தலைப்புச் செய்திகளிலும் வருகிறார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி திருமண உறவு முறிவுக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று ஒரு புறம் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது பலரது விமர்சனங்களையும் முன் வைத்தது.
கெனிஷா கர்ப்பமா?
மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும் இப்போது கெனிஷா கர்ப்பமாகவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
கெனிஷா விளக்கம்
இது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான் அதன் பிறகு கனடா சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு மீண்டும் பெங்களூருவிற்கு வந்துவிட்டேன்.
என்னுடைய அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு
என்னுடைய அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு. அதனால் நான் சொல்வதைத் தான் அவர்கள் கேட்பார்கள். என்னுடைய அம்மா பாடகி என்பதால் எனக்கும் அந்த ஆர்வம் வந்து நானும் பாடகியாகிவிட்டேன். எனக்கு 17 வயதாக இருக்கும் போது அம்மா இறந்துவிட்டாங்க. அதன் பிறகு அப்பாவும் இறந்துவிட்டார்.
காப்பி ஷாப் ஒன்றில் ரூ.500 சம்பளத்திற்கு வேலை பார்த்தேன்
நான் என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து தான் வந்திருக்கிறேன். நான் முதலில் காப்பி ஷாப் ஒன்றில் ரூ.500 சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். என்னை பற்றியும், என்னுடைய அப்பா, அம்மா பற்றியும் பலரும் பலவிதமாக பேசுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கு வாய் இருக்கிறது என்று பேசுகிறீர்கள். ஆனால், நாளைக்கு அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கர்மா சும்மா விடாது.
நான் கர்ப்பமாக இருக்கிறேன்? கர்மா சும்மா விடாது
மேலும், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள். எனக்கு சிக்ஸ் தான் இருக்கிறது. நான் ஒன்றும் கர்ப்பம் இல்லை. யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும். அதுவரையில் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். வரும் 15ஆம் தேதி என்னுடைய ஆல்பம் சாங் வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.