MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெண் ஊழியர் செய்த கேவலமான வேலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பெண் ஊழியர் செய்த காரியம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த பெண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
Published : May 22 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Google

தமிழ் கடவுளாகவும், அழகின் அம்சமாக போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : our own

குறிப்பாக அதுவும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை திருவிழா போன்ற தினங்களில் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். இக்கோவிலில் மூன்று விதமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் உள்ளன. இதில் ரூ.100 கட்டணமான சிறப்பு தரிசன ரசீதுகள் கணினி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Related image2
Sun Transit: கத்திரி வெயிலுக்கு நடுவே! மேஷம், சிம்மம் உட்பட இந்த 4 ராசிகளுக்கு அடிக்கப்போகுது மெகா ஜாக்பாட்!
34
Image Credit : our own

இந்நிலையில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலியாக ரசீது கொடுத்து பெண் ஊழியர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு பல லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பெண் ஊழியர் மேனகா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

44
Image Credit : Asianet News

கடந்த சில மாதங்களாகப் பக்தர்களிடம் ரூ.100 பெற்றுக் கொண்டு, கட்டண ரசீதை வழங்காமலும், நாளின் இறுதியில் கோயில் கணக்கில் பணத்தை செலுத்தும் போது, கணினி மென்பொருளில் புகார் கூறிவிட்டு, தலா ரூ.100 என பதிவான பல ரசீதுகளை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. முதற்கட்டமாக பெண் ஊழியர் மேனகாவை சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த மோசடி சம்பவம் பக்தர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோவில்
பெண்கள்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
Recommended image2
TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி.. அடிச்சு துவம்சம் செய்யப்போகும் கனமழை.. உங்க மாவட்டம் இருக்கா?
Recommended image3
Now Playing
12 th முடித்துள்ளவர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.63,000 சம்பளத்துடன் அரசு வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க !
Related Stories
Recommended image1
Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Recommended image2
Sun Transit: கத்திரி வெயிலுக்கு நடுவே! மேஷம், சிம்மம் உட்பட இந்த 4 ராசிகளுக்கு அடிக்கப்போகுது மெகா ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved