MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10th Marksheets: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

10th Marksheets: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

SSLC Student: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் ஆன்லைனிலும் சான்றிதழ்களைப் பெறலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 22 2026, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
Image Credit : Asianet News

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து மே 20ம் தேதி முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்திலும், சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 அரசு தேர்வுகள் இயக்ககம்
Image Credit : Google

அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: மார்ச்- ஏப்ரல் 2028 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பிற்பகல் முதல் பெற்று கொள்ளலாம். தனித்தேர்வுகள் www.dge.tn.gov.in from என்ற பகுதியில் சென்று Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

35
விடைத்தாள் ஒளிநகல்
Image Credit : Asianet News

விடைத்தாள் ஒளிநகல்

விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் மே 27 (புதன்கிழமை) 5.00 மணி (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.

45
விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணம் எவ்வளவு?
Image Credit : our own

விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணம் எவ்வளவு?

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275 தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

55
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி?

விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.in.gov.h என்ற பின்னர் இணையதளத்திலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
தமிழ்நாடு
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Land Scheme : பெண்களுக்காக தமிழக அரசு தரும் ரூ.5 லட்சம்! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
Recommended image2
School Holiday: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. மாணவர்கள் குஷி.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
Recommended image3
Today Rain: இன்று 5 மாவட்டங்களை குறிவைக்கும் மழை.. உங்க ஊரில் எப்படி இருக்கும்?
Related Stories
Recommended image1
TVK Vs AIADMK: முதல்வரே உங்க கட்சியினரை கொஞ்சம் அடக்கி வையுங்கள்! விஜய்-க்கு அதிமுக அட்வைஸ்
Recommended image2
Heatwave Alert: மண்டையை பொளக்கும் 107° வெயில்.. அடுத்த 2 வாரத்திற்கு உஷார்.. சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved