MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Mathipumigu Magalir Thittam: பெண்கள் வங்கிக் கணக்கில் வரப்போகும் ரூ.2,500.. மகளிர் உரிமைத் தொகை! சூப்பர் அப்டேட்!

Mathipumigu Magalir Thittam: பெண்கள் வங்கிக் கணக்கில் வரப்போகும் ரூ.2,500.. மகளிர் உரிமைத் தொகை! சூப்பர் அப்டேட்!

Mathipumigu Magalir Thittam: தவெக அரசு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாற்றப்பட உள்ளது. 

2 Min read
Author : Rayar r
Published : May 22 2026, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : Asianet News

மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் 1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது.

இதேபோல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தவெக ஆட்சியில் பெண்களுக்கு ரூ.2,500
Image Credit : CM Vijay FB

தவெக ஆட்சியில் பெண்களுக்கு ரூ.2,500

இதன்பிறகு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக வரலாறு படைத்து திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய், முந்தையை ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். இதற்கிடையே தவெக அரசு அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை ரூ.2,5000 எப்போது வழங்கப்படும் என பொதுமக்கள் காத்திருந்த நிலையில், வழக்கமாக கொடுக்கப்படும் ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் ரூ.2,500 கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Related Articles

Related image1
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய கட்டுப்பாடுகள்? இனி இவர்களுக்கு கிடைக்காது? முழு விவரம்!
Related image2
Rs 1000 Scheme : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பதிவு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே
34
மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்பு
Image Credit : Asianet News

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்பு

மே மாதத்துக்கான ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை விடுவித்த தவெக அரசு, இந்த திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் தகுதியில்லாத சில பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக பல வீடுகள் கட்டி அதிக சொத்துகளும் வைத்திருந்த சில குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர். சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் திமுக கட்சி செல்வாக்கை வைத்து மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர்.

அதே வேளையில் தகுதிவாய்ந்த பெண்கள் பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன. இதனை தீவிரமாக ஆராயும் தவெக அரசு, தகுதியில்லாத பெண்களை விடுவித்து, தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

44
மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
Image Credit : x

மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து தகுதியான பெண்களுக்கும் தவெக அரசு உரிமைத் தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான பட்டியலை முழுமையாக தயாரிக்க வேண்டும். புதிய பயனாளர்களைச் சேர்க்கத் தனி மென்பொருள் மற்றும் செயலிகளை வடிவமைக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது என்பது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கும். அதற்கேற்ப நிதியை ஒதுக்க திட்டமிட வேண்டும்.

மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாறுகிறது

இந்த மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் அதாவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட உள்ளது. ஆகவே இனிமேல் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற பெயரில் தான் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
10th Marksheets: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Recommended image2
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
Recommended image3
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
Related Stories
Recommended image1
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய கட்டுப்பாடுகள்? இனி இவர்களுக்கு கிடைக்காது? முழு விவரம்!
Recommended image2
Rs 1000 Scheme : ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பதிவு செய்வது எப்படி? முழு விபரம் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved