- Home
- Astrology
- Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Zodiac Signs: ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் மற்றும் வியாழனின் அபூர்வ சேர்க்கையால் ஜூன் 8-ம் தேதி வரை குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களின் மனைவிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த கிரக சேர்க்கையால் 5 ராசிக்காரர்களுக்கும் மளமளவென முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிரன்-வியாழன் சேர்க்கை
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒரு ஆணின் ஜாதகத்தில் 'களத்திரகாரகன்' என்று அழைக்கப்படும் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நிலையை வைத்துதான், அவனது மனைவியின் அதிர்ஷ்டத்தையும் குணத்தையும் கணிக்க முடியும். தற்போது சுக்கிரனும், தேவகுருவான வியாழனும் விண்ணில் ஒன்று சேர்ந்து பயணம் செய்கிறார்கள். இந்த அபூர்வ கிரக சேர்க்கை காரணமாக, வரும் ஜூன் 8-ம் தேதி வரை சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் மனைவிகளுக்குப் பெரிய அளவிலான அதிர்ஷ்டமும் யோகமும் அடிக்கப்போகிறது. இதனால் அந்த குடும்பங்களின் தொழில், வேலை மற்றும் பொருளாதார நிலை மளமளவென உயரப் போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார 6 ராசிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ரிஷப ராசி (பிரபலமாகும் யோகம்)
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், குருவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் மனைவிக்கு சமூகத்தில் மதிப்பும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பெரிய மனிதர்கள் அல்லது பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவரே ஒரு பிரபலமாக மாறும் அளவுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவருக்குச் சம்பள உயர்வும், கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.
மிதுன ராசி (ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கும்)
மிதுன ராசியில் சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகிய மூன்று சுப கிரகங்கள் ஒன்றாகப் பயணிக்கின்றன. திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறும். உங்கள் மனைவியின் நீண்ட நாள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பல வழிகளில் பண வரவு உண்டாகும். புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் தேடி வரும். ஆரோக்கியத்திற்கும் வருமானத்திற்கும் எந்தக் குறையும் இருக்காது.
சிம்ம ராசி (தொட்டதெல்லாம் பொன்னாகும்)
குரு மற்றும் சுக்கிரன் சாதகமான இடத்திலும், புதனுடன் இணைந்தும் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் மனைவி தொடும் காரியங்கள் அனைத்தும் அசுர வெற்றியைத் தரும். பிறந்த வீட்டில் இருந்து பூர்வீக சொத்துக்கள் அல்லது தன லாபம் வர அதிக வாய்ப்புள்ளது. எதிர்பாராத திடீர் பண வரவும், முதலீடுகளில் இரட்டிப்பு லாபமும் கிடைக்கும். நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
கன்னி ராசி (வெளிநாட்டுப் பயணங்கள்)
கன்னி ராசிக்கு 10-ஆவது வீட்டில் குரு, சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழ்கிறது. கணவன்-மனைவி இடையே இருந்த நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் மனைவிக்குக் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும், வேலையில் நல்ல கௌரவமும் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் ஆன்மீகச் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம் ராசி (கணவனுக்கே வேலை கிடைக்கும்)
துலாம் ராசிக்கு மிகச் சுபமான இடத்தில் சுக்கிரனும் குருவும் இணைந்திருக்கிறார்கள். உங்கள் மனைவியின் பெயரில் செல்வ வளம் அசுர வேகத்தில் பெருகும். அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மனைவியின் அதிர்ஷ்டத்தால் அவரது கணவருக்குப் புதிய நல்ல வேலை கிடைக்கலாம் அல்லது கணவனின் வேலையில் பெரிய பதவி உயர்வு (Promotion) கிடைக்கலாம். தொழில் வாழ்க்கை 'மூணு பூவும் ஆறு காயுமாக' செழிக்கும்.
கும்பம் ராசி (திருமண வாழ்வில் மகிழ்ச்சி)
கும்ப ராசிக்கு 5-ஆம் வீட்டில் சுக்கிரன், குரு மற்றும் புதனின் கூட்டணி அமைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள், குழப்பங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவியின் அலுவலகத்தில் அவரது திறமைக்குக் தகுந்த அங்கீகாரமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். திடீர் பண வரவுடன், வீட்டில் மழலைச் செல்வம் வளரும் பாக்கியமும் உண்டாகும்.

