- Home
- Astrology
- Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Mars Transit in Aries: கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தனது சொந்த வீட்டில் இருப்பதால் ருச்சக ராஜயோகம் உருவாகி உள்ளது. பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளது.

Mars Transit in Aries
ஜோதிட சாஸ்திரத்தின்படி, தைரியம், வீரம், ஆற்றல் மற்றும் மனவலிமைக்கு அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறார். தனது முழு சுழற்சியை முடிக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. அந்த வகையில், சுமார் 24 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். அவர் ஜூன் 21 வரை இதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
Navpancham Yog: சனி சுக்கிரன் சேர்க்கையால் நவபஞ்சம யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.! பணமும், புகழும் தேடி வரும்.!

ருச்சக பஞ்ச மகா புருஷ யோகம்
செவ்வாய் தனது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதால் ஜோதிடத்தில் மிக உயரியதாகக் கருதப்படும் 'ருச்சக பஞ்ச மகா புருஷ யோகம்' உருவாகியுள்ளது. இந்த மகா யோகத்தால், இரண்டு ஆண்டுகால கஷ்டங்கள் முடிவுக்கு வந்து, 3 குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும், அசுர வளர்ச்சியும் கிடைக்கப் போகிறது. இந்த ருச்சக ராஜயோகத்தின் மூலம் அபாரமான நன்மைகளைப் பெறப்போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான 11-வது வீட்டில் செவ்வாய் பகவான் இந்த யோகத்தை ஏற்படுத்துகிறார். எனவே பொருளாதார ரீதியாக இந்த காலம் மிகச் சிறப்பாக இருக்கும். பண வரவு கணிசமாக உயரும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்களது செல்வாக்கு அதிகரிப்பதோடு, உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எதிரிகளை வீழ்த்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவும், நிதி ரீதியான ஆதாயங்களும் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் நல்ல லாபம் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்கு தொழில் மற்றும் கர்ம ஸ்தானமான 10-வது வீட்டில் செவ்வாய் பகவான் இந்த யோகத்தை உருவாக்குகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் மீண்டும் சுமுகமாக நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல விரும்பியவர்களின் கனவு நனவாகும்.
மகரம்
மகர ராசிக்கு சுக ஸ்தானமான 4-வது வீட்டில் செவ்வாய் பகவான் இந்த யோகத்தை உருவாக்கியுள்ளார். ஜூன் 21 வரை தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சாதகமான பலன்களை அனுபவிப்பீர்கள். நீண்ட நாள் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். கடன் தொல்லைகளில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்; எதிர்பாராத பண வரவு மூலம் பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வழக்கு மற்றும் தேவையற்ற வம்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், புதிய தொழில் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

