- Home
- Tamil Nadu News
- குஷியில் மகளிர்கள்.! 1000 ரூபாய் உரிமை தொகையை பெற விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈஸியான வழிமுறை
குஷியில் மகளிர்கள்.! 1000 ரூபாய் உரிமை தொகையை பெற விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈஸியான வழிமுறை
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய முழுமையான வழிகாட்டி இங்கே.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு நிதி உதவி அளித்து மகளிர் மேம்பாட்டை உறுதி செய்யவும் தொடங்கப்பட்டது தான் மகளிர் உரிமைத்தொகையாகும், தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியை யார் பிடிப்பது என பல வகையிலும் போட்டியானது நடைபெற்றது. அந்த வகையில் திமுகவானது தனது தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்பான மாதம் தோறும் மகளிர்களுக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து திமுகவிற்கு ஆதரவான நிலை ஏற்பட்டது.
2021ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த திமுக, அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2023 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
மகளிர் உரிமை தொகை பயன்கள்
பெண்களின் வங்கி கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 பெண்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது, இதனால் குடும்பத்தின் நிதி நிலை மேம்படுகிறது. பெண்களுக்கு சொந்த செலவுகளுக்கான நிதி உதவி கிடைப்பதால், அவர்களின் சுயமரியாதையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கிறது. குழந்தைகளின் கல்வி, உணவு, மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படுவதால், குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உயர்கிறது.
மேலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்தத் தொகை கூடுதல் ஆதரவாக அமைந்து, வறுமையைக் குறைக்க உதவுகிறது. சில பெண்கள் இந்தத் தொகையை சிறு தொழில்கள் தொடங்க அல்லது முதலீடு செய்ய பயன்படுத்துவதால், அவர்களின் தன்னிறைவு அதிகரிக்கிறது.
ஜூலை 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
இதனிடையே இந்த மகளிர் உரிமை தொகையை பெற 1.63 கோடி விண்ணப்பங்களில் 1.15 கோடி மட்டுமே ஏற்கப்பட்டதால், சுமார் 50 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை தொடர்பாக குஷியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் என்ற தலைப்பில் 10ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளதாகவும்,அந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மனுவின் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், விதிமுறைகள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை தற்போது பார்க்கலாம்.
மகளிர் உரிமை தொகை பெற தகுதிகள்
- வயது: 21 வயதுக்கு மேல் உள்ள பெண்கள்.
- குடும்ப வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒரே குடும்பத்தில் ஒரே பெண் உறுப்பினருக்கு மட்டுமே வழங்கப்படும்
- அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோர், 10 ஏக்கர் நிலம் வைத்தவர்கள் தகுதியற்றவர்கள் மற்றும் பிற அரசு உதவி பெறுவோர் தகுதியற்றவர்கள்.
- சொத்து வரம்பு: குடும்பத்திற்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது.
- குடியிருப்பு: தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, குடும்ப அட்டை , வயதை உறுதிப்படுத்தும் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள், வருமானச் சான்று (VAO மூலம் பெறலாம்) விண்ணப்பதாரரின் புகைப்படம்
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை:
நேரடியாக விண்ணப்பிக்க:
உங்கள் பகுதியில் உள்ள e-Sevai மையம் அல்லதுபட்டா அலுவலகம் / வட்டாட்சியர் அலுவலகம்
விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது
மையத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை எடுத்துக்கொள்ளவும். பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை எண், திருமண நிலை, வீட்டு முகவரி, மின் இணைப்பு எண்ணிக்கை வங்கி விவரங்கள் (வங்கி, கிளை, கணக்கு எண்) குடும்ப உறுப்பினர்களின் பெயர், தொழில், வருமானத் தகவல் சொத்து/வாகன தொடர்பான விளக்கங்கள் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்; ஊழியர்கள் அவை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றுவர்.
இதனை தொடர்ந்து விண்ணப்பம் தொடர்பாக கள ஆய்வுக்கு பிறகு SMS அனுப்பப்படும் . விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், 30 அல்லது 31 நாட்களில் இணையதளத்தில்/app மூலம் மேல்முறையீடு செய்யலாம், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அடுத்த மாதம் முதல் தங்களது வங்கி கணக்கில் 1000 ரூபாய் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரவாகும்