தக்காளி ஒரு கிலோ இவ்வளவா.? எதிர்பாராமல் அதிகரித்த விலை- அதிர்ச்சியில் பொதுமக்கள்
பருவமழை காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளதால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.20-25க்கும், வெங்காயம் ரூ.25-40க்கும் விற்பனையாகிறது.

தக்காளியும் வெங்காயமும்
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக இருக்கும். அந்த வகையில் சாம்பார், கூட்டு, பொரியல் என எதுவாக இருந்தாலும் காய்கறிகள் அத்தியாவசியமாகும். காய்கறிகள் மனித உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவையாக உள்ளது.
தக்காளியானது சாம்பார், ரசம், குழம்பு, சட்னி, சூப், மற்றும் சாலட் தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ளது. வைட்டமின் C, K, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான லைகோபீன் உள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க தக்காளி பெரிதும் உதவுகிறது.
சமையலும் காய்கறிகளின் பங்கும்
வெங்காயத்தை பெறுத்தவரை சாம்பார், பொரியல், சட்னி, மற்றும் சாலட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, மற்றும் கந்தக கலவைகள்; நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இந்த நிலையில் மற்ற காய்கறிகளை விட இந்த இரண்டுக்கும் தான் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் காய்கறி சந்தைக்கும் மூட்டை, மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளியும் குவியும். நாள் தோறும் வரும் காய்கறியின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயையும், வெங்காயம் 150 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திடீரென அதிகரிக்க தொடங்கிய தக்காளி, வெங்காயம் விலை
இதனையடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து காய்கறி சந்தையில் அதிகளவு வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் பல மடங்கு குறைந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. வெங்காய்த 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஏறி இறங்கி வந்த இந்த விலை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பருவமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரு கிலோ 20 ரூபாயை தாண்டியுள்ளது. வெங்காயத்தின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் இதன் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
பச்சை காய்கறி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி விலை என்ன.?
காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும்,
இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது