MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோடை வெயிலுக்கு இடையே விடாமல் கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்.. ஸ்பாட் வைத்த வானிலை மையம்..

கோடை வெயிலுக்கு இடையே விடாமல் கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்.. ஸ்பாட் வைத்த வானிலை மையம்..

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்ரல் 30 முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 25 2026, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கோடை வெயில்
Image Credit : ANI

கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை எசச்ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை
Image Credit : Asianet News

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை

அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 27 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?
Related image2
சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?
37
இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை

ஏப்ரல் 28 மற்றும் 29 நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

47
கோவை ஊத்தப்போகும் மழை
Image Credit : Asianet News

கோவை ஊத்தப்போகும் மழை

ஏப்ரல் 30 கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

57
சேலம் மாவட்டங்களில் மழை
Image Credit : Asianet News

சேலம் மாவட்டங்களில் மழை

மே 01 நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும் இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

67
கடும் வெயிலால் அசௌகரியம் ஏற்படலாம்
Image Credit : Asianet News

கடும் வெயிலால் அசௌகரியம் ஏற்படலாம்

இன்று முதல் ஏப்ரல் 29 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

77
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
வெப்ப அலை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image2
Now Playing
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
Recommended image3
AIADMK: விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Related Stories
Recommended image1
Mahindra SUVs: புதிய 7 சீட்டர்களை களமிறக்கும் மஹிந்திரா.. புது லுக்கில் கூடுதல் அம்சங்கள்.. விலை எவ்வளவு?
Recommended image2
சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved