பண்ருட்டி எக்ஸ் அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை! கிலியில் எடப்பாடி பழனிசாமி!
2016-ம் ஆண்டு பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கணவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றுள்ளது. 2011-16ல் நகராட்சித் தலைவராக இருந்தபோது டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
தொடர் தோல்விகளால் துவண்டு போயிலுள்ள அதிமுக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இதில் பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். போகும் இடமெல்லாம் திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் இபிஎஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை
இந்நிலையில் காலையிலேயே அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம். இவர் 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் டெண்டர் விடும் பணி நடைபெற்றது. அந்த டெண்டரில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சத்யா பன்னீர்செல்வம்
இந்நிலையில் காலையிலேயே அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது எடப்பாடி பானிசாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் எம்எல்ஏவான சத்யா பன்னீர்செல்வம். இவர் 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் டெண்டர் விடும் பணி நடைபெற்றது. அந்த டெண்டரில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.