- Home
- Tamil Nadu News
- குஷியோ குஷி.! இ ஸ்கூட்டர் வாங்க ரூ. 20 ஆயிரம் மானியம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
குஷியோ குஷி.! இ ஸ்கூட்டர் வாங்க ரூ. 20 ஆயிரம் மானியம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக அரசு உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியமும், விபத்து காப்பீடும் அடங்கும்.

தமிழக அரசு மானிய உதவி திட்டங்கள்
தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல நிதி உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. மேலும் சொந்த தொழில் செய்து முன்னேறும் வகையில் கடன் உதவி திட்டங்கள், மானிய உதவி திட்டங்களும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் விவசாயிகள் மின் மோட்டார் வாங்கினால் 50 % அளவிற்கு தள்ளுபடியானது வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கும் பல திட்டங்களுக்கு மானிய கடன் உதவி வழங்கப்படுகிறது.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை
இந்த நிலையில் உணவு டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாலம் பொருட்களை டெலிவரி செய்து வரும் தொழிலாளர்களுக்காக சாலையோரங்களில் குளிர்சாதன வசதிகளோடு ஓய்வு அறை அமைக்கப்பட்டது.
அடுத்ததாக காப்பீடு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பணியின் போது மரணம் அடைந்தால் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. மேலும் ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டால் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு
அடுத்தாக 2 ஆயிரம் தொழிலாளர்கள் மின்சார இரு சக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்சார இரு சக்கர வாகனம்- 20ஆயிரம் மானியம்
இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பைக் இல்லாமல் சைக்களில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊரியர்கள் பயனடையவுள்ளனர். மேலும் பெட்ரோலுக்கு பல மடங்கு செலவு செய்து வரும் நிலையில் மின்சார பைக் மூலம் அதிக பணத்தை மிச்சம் செய்ய வாய்ப்பானது உருவாகியுள்ளது