- Home
- Tamil Nadu News
- ஸ்விக்கி, சொமோட்டோ 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 5 லட்சத்திற்கு காப்பீடு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
ஸ்விக்கி, சொமோட்டோ 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 5 லட்சத்திற்கு காப்பீடு.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
தமிழகத்தில் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் நலனுக்காக, அரசு ஓய்வறைகள் மற்றும் குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்து மரணம் மற்றும் உடல் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் இந்தத் திட்டம் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

தமிழக அரசின் திட்டங்கள்
நவீன காலத்திற்கு ஏற்க மக்களும் மாறி வருகிறார்கள். அந்த வகையில் இருக்கிற இடத்தில் இருந்து எந்த பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். கருவேப்பிலை முதல் ஹெலிகாப்டர் வரை வாங்க முடியும். எனவே கைக்குள் உலகம் வந்துவிட்டது. இந்த சூழலில் ஆன்லைன் டெலிவரி தொழிலில் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தில் உணவு பொருட்களை டெலிவரி செய்ய ஜொமோட்டோ, சுவிக்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளது. இந்த ஊழியர்கள் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாலம் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார்கள். இவர்களுக்காக தமிழக அரசு சென்னையில் குளிர்சாதன வசதியோடு ஓய்வு அறையை அமைத்துள்ளது.
உணவு டெலிவரி தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை
இதன் அடுத்தக்கட்டதாக 50 ஆயிரம் இணைய வழி சேவை தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் "தமிழ்நாட்டில் இணைய சேவை ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்த, விபத்து மரணம் மற்றும் உடல் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க ஒரு குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்ட சபையில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், காப்பீட்டு நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட தொகைக்கு காப்பீட்டு நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து கிக் தொழிலாளர்களையும் வாரியம் காப்பீடு செய்யும் மற்றும் அத்தகைய காப்பீட்டாளருக்கு பிரீமியத்தை செலுத்தும்.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு
ஒரு ஊழியர்களுக்கு 105 ரூபாய் என்ற அளவில் 52.50 லட்சம் ரூபாய் பிரிமியம் தொகை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி செலவுகள் இவர செலவுகள் என மொத்தமாக 69.95 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணியின் போது மரணம் அடைந்தால் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இரண்டு கைகள் ,கால்கள் மற்றும் கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டால் 2. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.50 லட்சம் முதல 5லட்சம் வரை
பாலிசியின் பிரீமியம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு பாலிசி செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொழிலாளர் இயக்குநரின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, விபத்து மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 50000 கிக் தொழிலாளர்களுக்கு ஒரு குழு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்கள்/நிபந்தனைகள் கவனமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது