- Home
- Tamil Nadu News
- தாலி கட்டிய புருஷனை விட்டுவிட்டு ஏன் இப்படி செய்த சிம்யா.. கதறிய மகள்.. விடாத 50 வயது தந்தை
தாலி கட்டிய புருஷனை விட்டுவிட்டு ஏன் இப்படி செய்த சிம்யா.. கதறிய மகள்.. விடாத 50 வயது தந்தை
திருப்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரையும் குழந்தையையும் பிரிந்து சென்ற மகளை, தந்தை ஆறுமுகம் கோபத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். போலீசாரால் மீட்டு ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50) . இவரது மகள் சிம்யா (22). இவருக்கும் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பிரேம்குமார் என்பவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது வீட்டின் அருகிலேயே மகள் இருக்க வேண்டுமென நினைத்த சிம்யாவின் தந்தை ஆறுமுகம் சிம்யா குடும்பத்தை திருப்பூரில் உள்ள முருகம்பாளையம் அடுத்த பாறைக்காடு பகுதியில் தனியாக வீடு எடுத்து கொடுத்துள்ளார். இதனையடுத்து பிரேம்குமார் சாய ஆலையில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே குடிபழக்கத்திற்கு அடிமையான கணவர் பிரேம்குமார் தினமும் மது அருந்திவிட்டு அடித்து தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்பவர் அறிமுகமானார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு கடந்த 2ம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோர் மற்றும் கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தந்தை ஆறுமுகம் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து சிம்யாவை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் தங்கியிருந்த சிம்யாவை மீட்டு அழைத்து வந்து நேற்று காவல் நிலையத்திலிருந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த ஆறுமுகம் தனது மனைவி வெளியே கடைக்கு சென்ற பின்னர் கட்டிலில் படுத்திருந்த மகளிடம் கட்டிய கணவனை விட்டுவிட்டு ஏன் இப்படி வேறு ஒருவருடன் சென்றாய் எனக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக தந்தை, மகள் இடையே தகராறாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கத்தியால் மகள் சிம்யாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
கடைக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்த தாயார் மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறி கூச்சலிட்டு அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிம்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு வீட்டிலேயே அமர்ந்திருந்த ஆறுமுகத்தையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பெற்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

