- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்! உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் இருந்த பெண்கள்
சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்! உள்ளே புகுந்த போலீஸ்.. அந்த கோலத்தில் இருந்த பெண்கள்
சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பழைய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கைது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அவ்வப்போது மசாஜ் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி விபச்சார தடுப்பு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம் SIB காலனி 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாப்டியில் அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சிலர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதும் பாலியல் தொழில் நடப்பதும் உறுதியானது.
இதனையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாலியல் புரோக்கர் சீனிவாசன்(55) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு என தனியாக வாட்ஸ் அப் குழு அமைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பாலியல் புரோக்கர் சீனிவாசனை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டது மட்டுமல்ல அவரிடம் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட சீனிவாசன் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

