- Home
- குற்றம்
- லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ரேணு தேவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது லெஸ்பியன் உறவுக்கு கணவர் தடையாக இருந்ததால், தனது காதலியுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளார்.

ஆண் கொடூர கொலை
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் திகார் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
லெஸ்பியன் உறவு
அதில், கொலை செய்யப்பட்டது விவசாயி சுமர் சிங் (33) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு பகீர் தகவல் வெளியாகின. சுமர் சிங்கை அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமர்சிங்கின் மனைவி ரேணு தேவி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மால்தி தேவி (27) என்ற பெண்ணுக்கும் லெஸ்பியன் உறவு இருந்து வந்துள்ளது. மால்தி தேவி ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
மனைவியை கண்டித்த கணவர்
சுமர் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் மால்தி தேவி அங்கு ரேணுதேவியுடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். திடீரென ஒருநாள் விவசாய வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுமர் சிங் மனைவி மால்தி தேவியுடன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான மனைவி ரேணு தேவியை கண்டித்தது மட்டுமல்லாமல் இனி அவரை பார்க்க கூடாது பேசக்கூடாது என கூறியுள்ளார்.
கூலிப்படை வைத்து கொலை
எனினும் ரேணு தேவியால் மால்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போது தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் சுமர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டனர். சுமர்சிங்கை கொலை செய்வதற்காக ஜித்தேர்ந்திர குப்தாவுக்கு ரூ.60,000 பேசப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.8,000 கொடுத்த ரேணுதேவி கொலைக்கு பின்னர் மீதமுள்ள தொகையை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜித்தேந்தர் குப்தா தனது கூட்டளிகளுடன் சேர்ந்து சுமர்சிங்கை கொடூரமான முறையில் துடிக்க துடிக்க கொலை செய்து பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரேணு தேவி, மால்தி தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

