- Home
- Tamil Nadu News
- குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! 50% மானியத்தை அப்படியே அள்ளிக்கொடுக்கும் அரசு.! பெறுவது எப்படி?
குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! 50% மானியத்தை அப்படியே அள்ளிக்கொடுக்கும் அரசு.! பெறுவது எப்படி?
வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% வரை மானியம் வழங்குகிறது. சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 50% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 40% மானியமும் டிராக்டர் இயந்திரம் போன்ற கருவிகள் வாங்க வழங்கப்படுகிறது.

தமிழக அரசு
விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல சூப்பரான அதிரடி சரவெடி திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு இயந்திரங்கள் வாங்க மானியத்தை தமிழக அரசு அள்ளி கொடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும் வேளாண்மை இயந்திரங்கள் வாங்க அசத்தலான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம்
அந்த வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான கருவிகளை வாங்க 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இயந்திரம் விலை ரூ. 50,000 இருந்தால் அதில் ரூ.25,000 மானியமாக அரசே வழங்கும். இதேபோல பெண் விவசாயிகள், ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
எந்தெந்த இயந்திரங்களுக்கு மானியம்
மற்ற விவசாயிகள் வேளாண்மை இயந்திரங்கள் வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயந்திரங்களுக்கான வாடகை மையம் அமைக்கவும் 80 சதவீதம் அளவிற்கு மானியம் அளிக்கப்பட உள்ளது.
எந்தெந்த இயந்திரங்களுக்கு மானியம்
* டிராக்டர்கள்
* கதிரடிக்கும் இயந்திரங்கள்
* பவர் டில்லர்கள்
* நெல் நடவு இயந்திரங்கள்
* களையெடுக்கும் கருவிகள்
* மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான மாவு அரைக்கும் இயந்திரம்
* எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு
* கரும்பு சோகை அரைக்கும் கருவிகள்
* தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
எந்தெந்த ஆவணங்கள் தேவை
* ஆதார் அட்டை,
* வங்கி கணக்கு புத்தகம்,
* நிலத்தின் சிட்டா, பட்டா
* புகைப்படம்
மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், செல்போனில் 'உழவன்' செயலியை (Uzhavan App) பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். அதேநேரம் ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

