- Home
- Tamil Nadu News
- கட்சியிலிருந்து என்னையே நீக்குறியா! அசராமல் இபிஎஸ்-க்கு எதிராக கெத்து காட்டும் செங்கோட்டையன்!
கட்சியிலிருந்து என்னையே நீக்குறியா! அசராமல் இபிஎஸ்-க்கு எதிராக கெத்து காட்டும் செங்கோட்டையன்!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயன்றதால், மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை சந்தித்ததால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார்.
ஓபிஎஸ் ஒரே காரில் செங்கோட்டையன்
இதனை தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்று இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையன் நீக்கம்
அதனை தொடர்ந்து ஓபிஎஸும், செங்கோட்டையனும் சசிகலாவை சந்தித்ததும் இபிஎஸ்க்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் செங்கோட்டையன் எந்த நேரத்திலும் கட்சி இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
11 செய்தியாளர்களை சந்திக்கிறார்
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது குறித்து இன்று காலை 11 மணிக்கு விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
இபிஎஸ் புகைப்படம் மறைப்பு
இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மறைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஓட்டப்பட்டுள்ளது.