மாதம் தொடக்கத்திலேயே இப்படியா? வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா?
எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலையை அறிவித்துள்ளன. இதன்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கச்சா விலைக்கு ஏற்ப சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றம்
அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நாள் தோறும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஜூன் ரூ.24 , ஜூலை 1ம் தேதி ரூ.58.50, ஆகஸ்ட் ரூ.33.50, செப்டம்பர் ரூ.51.50 மாதங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை தொடந்து குறைந்து வந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,754.50ஆக விற்பனை செய்யப்பட்டது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
இந்நிலையில், நவம்பர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக குறைத்துள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நேற்று ரூ.1,754.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.4.50 காசுகள் குறைந்து ரூ.1,750ஆக விற்பனையாகிறது.இதே போன்று டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களான வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.