- Home
- Tamil Nadu News
- அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசாதீங்க! திருமாவளவன் திடீர் கட்டுப்பாடு! என்ன காரணம்?
அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசாதீங்க! திருமாவளவன் திடீர் கட்டுப்பாடு! என்ன காரணம்?
தொல். திருமாவளவன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு விளக்கமளித்துள்ளார். கலைஞர் நினைவேந்தல் நிகழ்வில் தாம் கூறிய கருத்துகள் தனிப்பட்ட கருத்துகள் என்றும், யாரையும் அவமதிக்கும் நோக்கமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில்: ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மேடைகளில் பேசக்கூடிய நபர்கள் திருச்சியில் நடந்த மதச்சார்பின்மையை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மட்டுமே விளக்கி பேச வேண்டும். நடப்பு அரசியல் குறித்து பேசுகிறோம் என்ற பெயரில் நம்முடைய கருப்பொருளை மீறி வேறு எதையும் பேசும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
குறிப்பாக நேற்றும் இன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றியும் நான் அவமதிக்கும் வகையில் பேசி விட்டேன் என்கிற கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் இயக்கத் தோழர்கள் சமூக ஊடகங்களில் எதையும் பதிவிட வேண்டாம். அதேபோல் இன்று நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கோ அதிமுகவின் முன்னணி தலைவர்களுக்கோ பதில் சொல்கிறோம் என்ற பெயரில் எதையும் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். அது தொடர்பாக ஏதேனும் விளக்கம் ஊடகங்களில் எதிர்பார்த்தால் அந்த விளக்கத்தை தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். இயக்கத் தோழர்கள் யாரும் அது குறித்து எந்த விளக்கத்தையும் தர வேண்டாம். அல்லது எதிர்வினையும் ஆற்ற வேண்டாம்.
எந்த தலைவரையும் நான் குறைத்து மதிப்பிட்டதில்லை. அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை. கலைஞரின் நினைவேந்த நிகழ்வில் பேசுகிறபோது கலைஞர் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்று நான் விளக்கினேன். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்கிற அடிப்படையில் தான் அதனை நான் முன் வைத்தேன். தமிழ்நாட்டு அரசியல் கருணாநிதி எதிர்ப்பு என்பது ஒரு மையப் பொருள் ஆகவே சுழண்டு வந்துக்கொண்டிருக்கிறது. அண்ணா உயிரோடு இருந்த காலத்திலேயே அன்றைய காங்கிரசார் கலைஞரை தான் குறி வைத்தார்கள். அண்ணாவை குறி வைக்கவில்லை, பெரியாரை குறி வைக்கவில்லை. புதுச்சேரியிலும் கோட்டூர்புரத்திலும் அன்றைக்கு காங்கிஸ்சாரால் தாக்கப்பட்டவர் கலைஞர். அப்போதிலிருந்தே கலைஞருக்கு எதிராக அரசியல் தொடங்கிவிட்டது என்று தான் உரையில் குறிப்பிட்டேன்.
அண்ணா மறைவுக்கு பிறகு திமுக தலைமை பொறுப்பை அவர் ஏற்ற நிலையில் அவரை எதிர்த்து யார் யார் களமிறங்கினார்கள் எப்படி அவருக்கு எதிராக அரசியல் இங்கே கட்டமைக்கப்பட்டது என்று விளக்கி பேசுகிறபோது. அவரை ஏன் அப்படி எதிர்த்தார்கள் யார் அதற்கு பின்னணி என்பதையும் விலகினேன். அவர் பெரியார் அரசியலைத்தான் பேசினார். அண்ணா பேசியது தான் பேசினார். ஆனால் பெரியாருக்கு, அண்ணாவுக்கு அண்ணாவுக்கு எதிராக விமர்சிப்பவர்கள் அவ்வளவு இல்லை. கலைஞரின் விமர்சித்தவர்கள் தான் அதிகம்.
அண்ணா மறைவுக்கு பிறகு திமுக தலைமை பொறுப்பை அவர் ஏற்ற நிலையில் அவரை எதிர்த்து யார் யார் களமிறங்கினார்கள் எப்படி அவருக்கு எதிராக அரசியல் இங்கே கட்டமைக்கப்பட்டது என்று விளக்கி பேசுகிறபோது. அவரை ஏன் அப்படி எதிர்த்தார்கள் யார் அதற்கு பின்னணி என்பதையும் விலகினேன். அவர் பெரியார் அரசியலைத்தான் பேசினார். அண்ணா பேசியது தான் பேசினார். ஆனால் பெரியாருக்கு, அண்ணாவுக்கு அண்ணாவுக்கு எதிராக விமர்சிப்பவர்கள் அவ்வளவு இல்லை. கலைஞரின் விமர்சித்தவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு
அதற்கு காரணம் அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு பெரியாரீயத்தை பேசும் துணிச்சல் காரர் கலைஞர். ஆட்சி அதிகாரி பிடித்திருந்து கொண்டே அண்ணாவின் அரசியலில் இன்னும் ஆழமாக பேசியவர் கலைஞர். ஆனால், நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமதிக்கும் நோக்கில் பேசிவிட்டதாக கட்டமைக்கப் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் எதுவேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். மேலும், தமிழ்நாடு அரசு ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.