- Home
- Tamil Nadu News
- வாய திறந்தாலே பொய்தானா..? தேர்தலில் போட்டியிடாத நீங்க வெற்றி பற்றி பேசலாமா..? நிர்மலாவை எகிறி அடிக்கும் திமுக
வாய திறந்தாலே பொய்தானா..? தேர்தலில் போட்டியிடாத நீங்க வெற்றி பற்றி பேசலாமா..? நிர்மலாவை எகிறி அடிக்கும் திமுக
Nirmala Sitharaman | தேர்தலில்போட்டியிடாமல் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெற்றி தொடர்பாக கேள்வி எழுப்பலாமா என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் வன்மத்துடன் ஆட்சி செய்யும் திமுக
அண்மையில் கோவையில் வணிகர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வரி குறைப்பின் பயன்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்றும் அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோவை தான் தமிழகத்திற்கு அதிகமான வருவாயை வழங்குகிறது. கோவைக்கு தான் மத்திய அரசும் அதிக நிதியை வழங்குகிறது. மத்திய அரசு திட்டங்களில் மாநிலங்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டப்படுவது கிடையாது. திமுக தான் தமிழகத்தில் வன்மத்துடன் ஆட்சி செய்து வருகிறது.
SIR மேற்கொள்ளவது தேர்தல் ஆணையத்தின் கடமை
தமிழகத்தில் SIRக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்பு 10 முறையும், அதன் பின்னர் 3 முறையும் SIR நடைபெற்றிருக்கிறது. அப்பொழுதெல்லாம் கேள்வி எழுப்பாமல் இப்பொழுது மட்டும் போராட்டம் நடத்துவது ஏன்? ஒவ்வொரு முறையும் SIR மேற்கொள்ளப்பட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆட்சியின் தவறை மறைக்க மக்களை ஏமாற்றும் முயற்சி தான் இது.
போலி வாக்காளர்களால் வெற்றி பெற்ற முதல்வர்..?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அப்படியென்றால் போலி வாக்காளர்கள் வாக்களித்து தான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என கேள்வி எழுப்பினார்.
SIR என்ற பெயரில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பாஜக
இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள திமுக, தேர்தலில் போட்டியே காணாமல் மத்திய அமைச்சரான நீங்கள் வெற்றி தொடர்பாக பேசலாமா என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், “ED, IT, CBI இதெல்லாம் போதாதென தற்போது தேர்தல் ஆணையம் மூலம் SIR என்ற பெயரில் ஜனநாயகத்தை உயிரோடு புதைத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. வாக்காளர் பட்டியல் மூலம் பாஜக செய்யும் மோசடிகள் எல்லாம் நாடறிந்ததே.
தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமன்..
ஆனால் மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களுடன் இரண்டறக் கலந்து தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்தியாவின் முதன்மை மாநிலமாய் தமிழ்நாட்டை வழிநடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மக்களை நேரடியாக சந்திக்காமல் தேர்தலில் போட்டியிடாமல் நிதியமைச்சர் ஆனவரெல்லாம் தேர்தல் வெற்றியைப் பற்றி பேசலாமா? பாஜகவின் ஆதிக்கத்தை தமிழ் நிலத்தில் நுழைய விடாமல் தடுத்து நிற்கும் காவல் சிப்பாய் தான் திமுக. எனவே உங்களின் அவதூறுகள், பிரம்மாஸதிரங்கள், வருணாஸ்திரங்கள் என எதுவும் இங்கே எடுபடாது“ என திமுக குறிப்பிட்டுள்ளது.
மக்களில் ஒருவராக வாழ்ந்து, அவர்களுடன் இரண்டறக் கலந்து தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இந்தியாவின் முதன்மை மாநிலமாய் தமிழ்நாட்டை வழிநடத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்; மக்களை நேரடியாகச் சந்திக்காமல், தேர்தலில் போட்டியிடாமல் நிதியமைச்சர் ஆனவரெல்லாம் தேர்தல் வெற்றியைப்… pic.twitter.com/fAa57t1LRc
— DMK IT WING (@DMKITwing) November 12, 2025