- Home
- Tamil Nadu News
- ஆட்சியிலும் பங்கு வேண்டாம்.! அமைச்சரவையிலும் இடமும் வேண்டாம்- திமுகவை உச்சி குளிரவைத்த கூட்டணி கட்சி
ஆட்சியிலும் பங்கு வேண்டாம்.! அமைச்சரவையிலும் இடமும் வேண்டாம்- திமுகவை உச்சி குளிரவைத்த கூட்டணி கட்சி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் குழுப்பத்தில் உள்ளது. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என திமுகவின் கூட்டணி கட்சி அறிவித்துள்ளது.

சூடு பிடிக்க தொடங்கும் தமிழக தேர்தல் களம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முழுவதுமாக முடிவடைந்து 5வது ஆண்டில் பாதி மாதங்கள் முடிவடைந்து விட்டது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. டிசம்பர் மாதத்தில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிடும். இந்தநிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு காய் நகர்த்தி வருகிறது.
அதே நேரம் தனித்து ஆட்சி அமைப்போம் என திமுக கூறி வரும் நிலையில் தமிழகத்தில் பல தரப்பில் இருந்தும் கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் எழுந்துள்ளது. அதில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தங்கள் கட்சியோடு கூட்டணி வைப்பவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என அரசியல் கட்சிகளுக்கு ஆசை வார்த்தை கூறி இழுத்து வருகிறார்.
ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் பங்கு
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி, பாமக தலைவர் அன்புமணி, விடுதலை சிறுத்தை கட்சியினர். தேமுதிக உள்ளிட்ட பலரும் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்த அதிமுகவும் கூட்டணி ஆட்சி என்ற நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளது. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழகத்தல் கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என உறுதியாக தெரிவித்து வருகிறார்.
இவரது கருத்தை தமிழக பாஜக நிர்வாகிகளும் ஆமோதித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் திராவிட கட்சிகளான திமுக- அதிமுகவை ஆட்டம் கான வைத்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என தெரிவித்துள்ளது.
திமுக- அதிமுகவிற்கு செக் வைக்கும் கட்சிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி வெளிநாடு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எழுப்பும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதை தவிர்ப்பதற்காகவே இது போல பிரதமர் மோடி செய்கிறார் என விமர்சித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக தற்போது நான்காக உடைந்த அதிமுகவை ஒன்று சேர்க்கட்டும் என கூறினார்.
அமைச்சரவையில் இடம் வேண்டாம்- சிபிஎம்
எல்லா அரசியல் கட்சிகளும் தற்போது ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்புகிறார்களே சிபிஎம் அது போல கேட்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சிபிஎம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். கூட்டணி மந்திரி சபையில் பங்கு பெறவும் மாட்டோம், எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் தான் அந்த ஆட்சியில் பங்கு பெறுவோம் கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என சண்முகம் உறுதியாக தெரிவித்தார்.