- Home
- Tamil Nadu News
- கார்த்தி சிதம்பரத்துக்கு என்னாச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியால் அதிர்ச்சி
கார்த்தி சிதம்பரத்துக்கு என்னாச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியால் அதிர்ச்சி
சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் வயிறு பிரச்சனை என கூறப்பட்ட நிலையில், தற்போது சிறிய அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டை அதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியானது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செய்தியை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமதாஸ்
ஏற்கெனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களை முதல்வர் ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன், எடப்பாடி பானிசாமி ஆகியோர் நலம் விசாரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.