- Home
- Tamil Nadu News
- என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா! பெண்ணால் கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா! பெண்ணால் கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
Coimbatore International Airport: கோவை விமான நிலையத்தில் வைத்து என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வருகிறாயாடா பொம்பள பொறுக்கி என கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை பெங்களூர் ஐதராபாத் டெல்லி கொச்சின் மும்பை என உள்நாட்டுக்கு 30 விமானங்களும் வெளிநாடுகளுக்கு மூன்று விமானங்களும் இயக்கப்படுகிறது. அதன்படி கோவை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.20 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணிகள் வந்து வெளியே சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆணும், பெண்ணும் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் வழியில் வந்து கொண்டு இருந்தனர்.
கணவரை பொம்பள பொறுக்கி திட்டிய பெண்
அப்போது அங்கு காத்திருந்த இளம்பெண் ஒருவர் அனைவரது முன்னிலையிலும் என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா" பொம்பள பொறுக்கி என ஆத்திரத்தில் பேசியபடி ஓடி வந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த தம்பதி விரைந்து சென்று அங்கு வந்த காரில் ஏறினர். அதே வேளையில் அங்கிருந்த நபர் ஒருவர் ஆத்திரத்தில் கத்தியபடி இருந்த இளம்பெண்ணின் கைய பிடித்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மேலும் ஆத்திரத்தில் பொங்கிய இளம்பெண், அவரது கன்னத்தில் பளார் என அறைந்ததுடன் அவரது சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் உஷார் மக்களே! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
வீடியோ வைரல்
இதேபோல் சமரசம் செய்ய முயன்ற அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தடுக்கச் சென்றபோது காசு இருந்தால் என்ன வேணும்னாலும் செய்வீர்களா என கேட்டு வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து தன்னை கண்டதும் காரில் தப்பி ஓடிய நபர் கோவை ராஜ வீதியில் ராஜா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும் ஏற்கனவே தானும் அவரும் காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்த நிலையில் மீண்டும் தன்னை சமாதானப்படுத்தி தனியே வீடு எடுத்து தங்க வைத்ததாகவும் பின்னர் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: இன்றை தங்கம் விலை என்ன? எறியதா? இறங்கியதா? இதோ நிலவரம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு
மேலும் தற்போது தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஹனிமூன் சென்று வந்துள்ளதாகவும் காவல்துறையில் ஏற்கனவே வழக்கு உள்ளது எனவும் ஆத்திரத்தில் கூறியதுடன் அங்கு இருந்தவர்களை பார்த்து இத்தனை பேர் நிற்கிறீர்கள் காரில் அவன் தப்பித்து செல்கிறார் யாரும் அவனை பிடிக்கவில்லை? என கேள்வி கேட்டு அங்கிருந்தவர்களை திட்டினார். இளம்பெண்ணின் கதறலால் கோவை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.