இவ்வளவு தள்ளுபடியா.? ஒரே நாள் தான் டைம்.!கோ-ஆப்டெக்ஸ் அசத்தல் அறிவிப்பு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் செப்டம்பர் 14 வரை 30% தள்ளுபடி அறிவித்துள்ளது. கைத்தறிப் புடவைகள் மற்றும் ஆடைகளை வாங்கி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.

கோ-ஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை
தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. இங்கு பல வண்ணங்களில் வித விதமான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டு விற்பனை தொடர்ந்து ரூ.1000 கோடிக்கு மேல் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி கூட்டுறவு அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
முக்கிய நாட்களில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் அவர்களின் பங்கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) சிறப்பு விற்பனை சலுகையை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தினத்திற்காக தள்ளுபடி
"Weaving thanks in every thread!" என்ற வாசகத்தோடு தொடங்கியுள்ள இந்த பிரசாரம், ஆசிரியர் தினத்துக்கு உரிய மரியாதையை வெளிப்படுத்துகிறது. கோ-ஆப்டெக்ஸ் என்பது பாரம்பரிய கைத்தறி நெய்த புடவைகள், ஆடைகள் மற்றும் துணிகளை உலகளவில் பரப்பி வரும் பெருமைக்குரிய நிறுவனம். கைத்தறி தொழிலாளர்களின் உழைப்பையும் திறமையையும் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
தற்போது செப்டம்பர் 14-ம் தேதி வரை 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டதால், பலரும் தங்கள் ஆசான்களுக்கு சிறந்த பரிசுகளைத் தேர்ந்தெடுக்க ஏற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
30% தள்ளுபடி - கோ ஆப்டெக்ஸ் அறிவிப்பு
நம் கலாச்சாரம், பாரம்பரியம், கலை நுணுக்கம் மற்றும் நெய்தலின் கைவினைத் திறனை ஒருங்கிணைக்கும் கோ-ஆப்டெக்ஸ் புடவைகள், நம் வாழ்வின் முக்கிய தருணங்களில் பெருமையுடன் அணியப்படும். குறிப்பாக, ஆசிரியர்களுக்கான அன்பும் மரியாதையும், ஒரு கோ-ஆப்டெக்ஸ் புடவை அல்லது கைத்தறி ஆடை மூலம் வெளிப்படுத்தப்படும்போது, அது நன்றி உணர்வின் அழகிய அடையாளமாக மாறுகிறது.
ஆசிரியர்களின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்க, ஒரு கோ-ஆப்டெக்ஸ் புடவை வாங்குவது, நம் பாரம்பரியத்தையும் நன்றி உணர்வையும் ஒருங்கிணைக்கும் அழகிய வழி என்று சொல்லலாம்.
செப்டம்பர் 14 வரை
மொத்தத்தில், இந்த ஆசிரியர் தின சலுகை, கைத்தறி தொழிலாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் நன்றி தெரிவிக்கும் சிறப்பான முயற்சி ஆகும். செப்டம்பர் 14 வரை நீடிக்கும் இந்த தள்ளுபடி சலுகையை மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.