- Home
- Tamil Nadu News
- ஓசூரில் நிலம், வீடு, வில்லா விலை பறக்குது! தமிழ்நாட்டின் அடுத்த ஹாட்ஸ்பாட் இதுதான்!
ஓசூரில் நிலம், வீடு, வில்லா விலை பறக்குது! தமிழ்நாட்டின் அடுத்த ஹாட்ஸ்பாட் இதுதான்!
ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதால், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலம், வீடு, வில்லாக்களின் விலை உயர்ந்து வருகிறது.

ஓசூர் ரியல் எஸ்டேட்
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை நகரமாக விளங்கும் ஓசூர், சமீப ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘பெங்களூருவின் ட்வின் சிட்டி’ என்று அழைக்கப்படும் அளவிற்கு, ஐடி நிறுவனங்கள், உற்பத்தித் துறை, எலக்ட்ரானிக்ஸ் ஹப் ஆகியவை ஓசூரின் பொருளாதார வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இதனுடன், தமிழக அரசு சுமார் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த செய்தி, அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஓசூர் விமான நிலையம்
ஓசூரின் கிழக்குப் பகுதியில், தனேஜா ஈரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஏர் ஸ்ட்ரிப்பிலிருந்து 15.5 கி.மீ தொலைவில், பெரியகை - பாகலூர் இடையே இந்த விமான நிலையம் உருவாகிறது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் அளவிற்கு மேம்பட்ட வசதிகளுடன், உலகத் தரத்தில் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்படும். இதனுடன், டைடல் பூங்கா, புதிய வர்த்தக வளாகங்கள், சாலை விரிவாக்கம், மெட்ரோ நீட்டிப்பு, ரயில் இணைப்புகள் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன, ஓசூர் ஒரு சர்வதேச நகரமாக மாறும் பாதையில் நகர்கிறது.
பெங்களூருவின் ட்வின் சிட்டி
இந்த அடிப்படை வசதிகள் தவிர, ஓசூரின் இயற்கை அழகு, சுகமான வானிலை, அமைதியான குடியிருப்பு பகுதிகள் ஆகியவை குடும்பங்களுக்கு வாழ்வதற்கான சிறந்த சூழலை வழங்குகின்றன. பெங்களூரில் இட நெருக்கடி, அதிக வாடகை செலவு, வாழ்க்கைச் செலவு போன்ற காரணங்களால் பலர் ஓசூரை தேர்வு செய்கிறார்கள். இப்போது, “பெங்களூரில் வேலை – ஓசூரில் வீடு” என்ற புதிய போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், நிலம், தனி வீடு, வில்லா வாங்கும் ஆர்வம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தமிழக அரசு திட்டம்
சிறப்பாக, ஏர்போர்ட் ரோடு, ஓசூர் - பெங்களூரு ஹைவே, ஓசூர் - கிருஷ்ணகிரி ஹைவே, மாலூர் ரோடு, சர்ஜாபூர் - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வழித்தடங்கள் போன்ற பகுதிகளில் நில விலை வேகமாக உயர்ந்து வருகிறது. Housing.com போன்ற ரியல்டி பிளாட்ஃபார்ம்களின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு ஓசூரில் நில முதலீடு, வீடு வாங்கும் தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இன்று சென்னை, பெங்களூரு அளவிற்கு விலைகள் அதிகமாகவில்லை என்பதால், வர்க்கம் முதல் உயர் வர்க்கம் வரை பலரும் ஆர்வத்துடன் முதலீடு செய்கிறார்கள் செய்கிறார்கள். நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
ஓசூர் மெட்ரோ, ஹைவே, விமான நிலையம்
தொழில்துறை நகரமாக வளர்ந்து கொண்டு வரும் ஓசூரில் விமான நிலையம் வரும் போது, அது நிச்சயம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்றே கூறலாம். மொத்தத்தில், விமான நிலைய வளர்ச்சி, தொழில் – வணிக மேம்பாடு, போக்குவரத்து வசதி, வாழ்க்கைத் தரம் ஆகியவை சேர்ந்து, ஓசூரை தமிழ்நாட்டின் அடுத்த ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது. நிலம், வீடு, வில்லா வாங்க விரும்புவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். வரவிருக்கும் காலத்தில் ஓசூரில் முதலீடு செய்வது, பாதுகாப்பானதும் அதிக லாபகரமானதுமான முடிவு என்று கூறலாம்.