MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • மதுரை தமிழனை நேருக்கு நேர் அமர வைத்த டிரம்ப்..! மதுர மதுர தாண்டா

மதுரை தமிழனை நேருக்கு நேர் அமர வைத்த டிரம்ப்..! மதுர மதுர தாண்டா

இந்த மீட்டிங்கில் ட்ரம்ப் தனக்கு நேர் எதிரே கூகுள் தலைமை செயல் அலுவலர் தமிழரான சுந்தர் பிச்சையை அமர்த்தி இருந்தார். இது சுந்தர் பிச்சைக்கு கிடைத்த அங்கீகாரமாக நிச்சயமாக பார்க்கப்படும்.

3 Min read
Thiraviya raj
Published : Sep 05 2025, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய மாபெரும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளான கூகிளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா உள்ளிட்டோருக்கும் விருந்தளித்தார்.

டிரம்பின் விருந்தில் ஐந்து இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளில் கலந்து கொண்டனர். சுந்தர் பிச்சை டிரம்பின் ஏஐ செயல் திட்டத்தை டிரம்ப் பாராட்டித்தள்ளினார்.

"ஏஐ தருணம் என்பது நாம் எவரும் இதுவரை கண்டிராத, நம் வாழ்நாளில் காணப்போகும் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணங்களில் ஒன்று. உங்கள் தலைமையின் கீழ் ஏஐ செயல் திட்டம், ஒரு சிறந்த தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஒன்றாக வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்கள் தலைமைக்கு நன்றி" என தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த கூகிள் சீஇஓ சுந்தர் பிச்சையை பாராட்டினார் ட்ரம்ப்.

24
Image Credit : Asianet News

இதற்கிடையில், ஹைதராபாத்தில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா, ‘‘உலகம் அமெரிக்க தொழில்நுட்பத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. உலகின் பிற பகுதிகள் நமது தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தாமல், வேறு எந்த மாற்றீட்டையும் விட, நமது தொழில்நுட்பத்தை நம்பக்கூடிய தளத்தை அமைப்பதில் நீங்கள் செய்யும் அனைத்தும் மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம்.உங்கள் கொள்கைகள் நிறைய உதவியது '’ எனறு டிரம்பிடம் கூறினார். சுந்தர் பிச்சை, நாதெல்லா பேசிய பிறகு, ‘‘ நீங்கள் இருவரும் ஒரு நல்ல வேலையைச் செய்கிறீர்கள்’’ என டிரம்ப் அவர்களை பாராட்டினார்.

இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரிகள் விதிப்பது தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் பதற்றங்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில், டிரம்பிற்கு இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கு மாறாத நிறுவனங்களின் செமிகண்டெக்டர்களுக்கு இறக்குமதிகளுக்கு வரிகளை விதிக்கப்போவதாகவும் டிரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

Related Articles

Related image1
விடாக்கண்டன் எடப்பாடி..! தலைமை தாங்கப்போகும் செங்கோட்டையன்..! பாஜக ஆசியுடன் அதிரடி அரசியல்..!
34
Image Credit : Asianet News

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லாவைத் தவிர, இந்த விருந்தில் மைக்ரானின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, TIBCO மென்பொருள் தலைவர் விவேக் ரணதிவே, பலந்திர் நிர்வாகி ஷியாம் சங்கர் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அவர்களைத் தவிர, மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகிள் நிறுவனர் செர்ஜி பிரின், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன், ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ், ப்ளூ ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லிம்ப், ஸ்கேல் ஏஐ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸாண்ட்ரா வாங் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் இந்த இரவு உணவு வழங்கப்பட்டது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தான் அழைக்கப்பட்டதாகக் கூறி இருந்தார். ஆனால் அவர் இரவு உணவைத் தவிர்த்தார். சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் எதிர்த்த 'பிக் பியூட்டிஃபுல் மசோதா' தொடர்பாக மஸ்க், டிரம்ப் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்த மீட்டிங்கில் மொத்தம் ஐந்து இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டாலும் சுந்தர் பிச்சை மட்டுமே டிரம்புடன் நேருக்கு நேர் அமர வாய்ப்பு கிடைத்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு சீனாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உலகின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் நிறுவனங்களின் தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்தார்.

44
Image Credit : stockPhoto

ஒட்டு மொத்தமாக அனைவரையும் அழைத்து மிகப் பெரிய மீட்டிங் அறையில் சந்திப்பு நடைபெற்றது. இதில் ட்ரம்பின் மனசாட்சியாக செயல்பட்ட எலான் மாஸ்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் பங்கேற்கவில்லை. எலன் மாஸ்க்கும் எக்ஸ் என்ற வலைதளம் மற்றும் பல மென்பொருள் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மீட்டிங்கில் ட்ரம்ப் தனக்கு நேர் எதிரே கூகுள் தலைமை செயல் அலுவலர் தமிழரான சுந்தர் பிச்சையை அமர்த்தி இருந்தார். இது சுந்தர் பிச்சைக்கு கிடைத்த அங்கீகாரமாக நிச்சயமாக பார்க்கப்படும்.

இது போன்ற மீட்டிங்குகளில் நிச்சயம் தலைவர்கள் தமக்கு நேர் எதிரே மற்றும் அருகில் யார் அமர வேண்டுமென அவர்கள்தான் நிர்ணயம் செய்வார்கள். மதுரையை பூர்விகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சுந்தர்பிச்சை ஆகியோர் இன்று உலக அளவில் கொடிகட்டி பறக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு அம்சம்.

மதுரை, கேகே நகரில் குடியேறிய சுந்தர் பிச்சை, அசோக் நகர், ஜவகர் வித்யாலயாவில் பள்ளி படிப்பையும், சென்னை ஐஐடி வணவாணி பள்ளி மற்றும் கொரக்பூர் ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர். நிர்மலா சீர்தாரா ராமன், திருச்சி மற்றும் டெல்லியில் படித்திருந்தாலும், சொந்த ஊர் மதுரைதான்.

சுப்பிரமணியன் சுவாமியும் சொந்த ஊர் மதுரை சோழவந்தான்தான். இந்த மீட்டிங்கில் மொத்தம் ஐந்து இந்தியாவைச் சேர்ந்த அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டாலும் சுந்தர் பிச்சை மட்டுமே நேருக்கு நேர் அமர வாய்ப்பு கிடைத்தது.

About the Author

TR
Thiraviya raj
சுந்தர் பிச்சை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved