MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விடாக்கண்டன் எடப்பாடி..! தலைமை தாங்கப்போகும் செங்கோட்டையன்..! பாஜக ஆசியுடன் அதிரடி அரசியல்..!

விடாக்கண்டன் எடப்பாடி..! தலைமை தாங்கப்போகும் செங்கோட்டையன்..! பாஜக ஆசியுடன் அதிரடி அரசியல்..!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். செங்கோட்டையனுக்கு பாஜகவின் ஆதரவும் இருக்கிறது. ஆகையால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

3 Min read
Author : Thiraviya raj
Published : Sep 05 2025, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஒருங்கிணைந்த அதிமுக, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கவேண்டும்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து வைத்து பிரஸ்மீட்டை முடித்திருக்கிறார்.

ஆட்சியா..? கட்சியா..? என்ற சூழல் வந்தால், ஆட்சியைவிட, கட்சிதான் முக்கியம் என்பதுதான் எடப்பாடியரின் மனநிலை. இதை மனதில் வைத்துக்கொண்டுதான் தேர்தல் நெருங்கும் வரை பொறுமையாக காத்திருந்திருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையன் பேச்சை கவனித்தால், இதற்கு முன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் அவர்களாலேயே மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். அதுதான் சிறந்த முடிவு என்கிறார். ஆக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரி இல்லை என்று மறைமுகமாக கூறுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் நோக்கோடு, ஒன்றிணைப்பு குறித்து, 6 முக்கிய முன்னாள் அமைச்சர்களுடன் சென்று வலியுறுத்தியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். இதையேதான் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவும் கூறினார். டிடிவி.தினகரனை கட்சியில் சேருங்கள், பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேருங்கள், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று எடப்பாடியாரிடம் கூறியிருக்கிறார். அன்று முதல் அன்வர்ராஜாவுக்கான நெருக்கடிகளை எடப்பாடியார் கொடுக்கத் தொடங்கி விட்டார். கடைசியில் அவர் திமுகவுக்கு பறந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இப்போது தேர்தல் சமயத்தில் எடப்பாட்டியாருக்கு நெருக்கடி கொடுக்கிறார் செனஙகோட்டையன்.

யார் சொன்னாலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரனை எடப்பாடியார் கட்சியில் சேர்க்கமாட்டார். 10 நாள் அல்ல, 100 நாள் கெடு விதித்தாலும் அது நடக்காது. அது தெரிந்தே தான் செங்கோட்டையன் இந்த டார்கெட்டை முன் வைத்திருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை எல்லாம் எடப்பாடியார்தான் என்ற தாரக மந்திரத்தை தூக்கிப்பிடிப்பவர்களுக்கே இடம் என்பது செங்கோட்டையனுக்கு தெரியாததல்ல.

35
Image Credit : Asianet News

ஒருங்கிணைந்த அதிமுகவை நாங்கள் உருவாக்க முனைந்தோம். எடப்பாடியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் தொண்டர்களின் விருப்பப்படி, பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூற, ஒரு வாய்ப்பை இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாக உருவாக்கி இருக்கிறார் செங்கோட்டையன். விரைவில் அதிமுக அணிக்குள் சலசலப்பு ஏற்படும். முக்கிய நிர்வாகிகளுடன் போட்டி அதிமுக உருவாகும். அதிமுகவுக்குள் எஞ்சியிருக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆட்கள், இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். செங்கோட்டையன் அன்வர்ராஜா, மைத்ரேயன், போன்ற இன்னும் எத்தனை பேர் எடப்பாட்டியாருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இனி தெரியுவரும்.

அதிமுக ரத்தத்தின் ரத்தங்களை பொறுத்தவரை உடைந்த அதிமுக ஒன்று சேரவேண்டும் என்றுதான் துடிக்கிறார்கள். அரசியல் களத்தில் அதிமுக பலமிழந்து நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில், சசிகலாவோ, செங்கோட்டையன் கருத்தை வரவேற்று, அவருக்கு அதிமுக ரத்தம் ஓடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ வைதியநாதன் அதிமுக தொண்டர்கள் அவர் பின்னால் இருப்பதாக கூறியுள்ளார்.

45
Image Credit : our own

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று பாஜக தலைவர்கள் அறிவித்திருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் செங்கோட்டையன் முடிவை வரவேற்றிருக்கிறார். அவர்கள் கூட்டணிக்கு பலம் சேர்ந்தால் நல்லது ஆகையால் வரவேற்பார்கள். எடப்பாடியாருக்கு நெருக்கடி அதிகமானால், அது பாஜகவுக்கு ஆதாயம். நாங்கள் உங்கள் கட்சி பிரச்னையில் தலையிடவில்லை. உங்க உட்கட்சி பூசலுக்கு நாங்க பொறுப்பா.? ‘‘தேர்தல் வெற்றி, கூட்டணி இதை மனதில் வைத்து நல்ல முடிவாக எடுங்கள்’’ என்று இனி டெல்லியில் இருந்து எடப்படியாருக்கு நெருக்கடி வரும். அதாவது மறைமுகமாக அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக முயலும். ஆனாலும் எடப்பாடியாரின் தயவு முக்கியம் என்பதால், கட்டாயப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்காது. ஆக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க எடப்பாடியார் முன்வராத நிலையில், செங்கோட்டையன் தலைமையில், பிரிந்தவர்களை புதிய அணியாக ஒருங்கிணைத்து ‘போட்டி அதிமுக’ அமைத்து, தனித்தோ.? அல்லது புதிய கூட்டணி அமைத்தோ.? களத்தில் நிற்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது.

55
Image Credit : our own

அதே நேரத்தில் எடப்பாடியாருக்கு கெடு விதித்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. காரணம், அவரை நீக்குவதை பாஜக விரும்பாது. அமித் சா விரும்ப்புவதும் ஒருங்கினைந்த அதிமுகவைதான். ஒருங்கிணைந்த அதிமுகவை அக்கட்சியில் இருக்கும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். ஒருவேளை செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்தும். செங்கோட்டையனுக்கு பாஜகவின் ஆதரவும் இருக்கிறது. ஆகையால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
செங்கோட்டையன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Recommended image3
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
காலையில் செங்கோட்டையன்! அடுத்து சசிகலா! பதற்றத்தில் இபிஎஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved