- Home
- Tamil Nadu News
- 12ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! இன்று வெளியிடுகிறது பள்ளிக்கல்வித்துறை
12ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! இன்று வெளியிடுகிறது பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
மாணவர்கள் உயர்கல்வியை சேர 12ஆம் வகுப்பு தேர்வு தான் முக்கிய பங்கு வகிக்கும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர முடியும்.
அந்த வகையில் 2024-25 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8,21,057 பேர் எழுதினர். இதில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் எழுதினர். இதில் பொதுத் தேர்வு எழுதிய 7,19,196 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றனர், இது 94.56% தேர்ச்சியாகும்.
12ஆம் வகுப்பு மாணவர்கள் மறு கூட்டல்
இந்த நிலையில் தாங்கள் எழுதிய தேர்வில் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததான கருதும் மாணவர்களுக்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து மறுகூட்டலுக்கு அரசு தேர்வு துறை விண்ணப்பிக்க அறிவுறுத்தியது. இந்த நிலையில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முடிவுகள் வெளியாகவுள்ளது.
முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், ஜூன்/ஜூலை 2025 மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகிறது 12ஆம் வகுப்பு மறு கூட்டல் முடிவு
அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஜூன்/ஜூலை 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில் 20.082025 (புதன்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும்.
தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி.?
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.