MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு! போக்குவரத்து துறை சொன்ன ஹேப்பி நியூஸ்!

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு! போக்குவரத்து துறை சொன்ன ஹேப்பி நியூஸ்!

வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 20 2025, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்
Image Credit : our own

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை, 23 சனிக்கிழமை மற்றும் 24 ஞாயிறுக் கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

36
சென்னை கிளாம்பாக்கம்
Image Credit : our own

சென்னை கிளாம்பாக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை அன்று 340 பேருந்துகளும், 23 சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 22 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 23 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

46
மாதாவரம்
Image Credit : our own

மாதாவரம்

மாதாவரத்திலிருந்து ஆகஸ்ட் 22 அன்று 20 பேருந்துகளும் 23 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

56
Mobile App மூலம் முன்பதிவு
Image Credit : our own

Mobile App மூலம் முன்பதிவு

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,233 பயணிகளும் சனிக்கிழமை 2,966 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 5,510 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

66
சிறப்பு பேருந்து இயக்கம்
Image Credit : our own

சிறப்பு பேருந்து இயக்கம்

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
அரசு விடுமுறை
சென்னை
தமிழ்நாடு அரசு
பள்ளி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Related Stories
Recommended image1
சிறுநீரக கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு! அதுவும் அதே மாவட்டத்தில்! அன்புமணி சொன்ன பகீர்!
Recommended image2
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved